மலேசியாவில் இருந்து ஆணுறைக்குள் வைத்து 7 தங்க கட்டிகளை விழுங்கி வந்த நபரின் வயிற்றுக்குள் இருந்து 3 நாட்கள் போராட்டத்திற்கு பின்னர் தங்க கட்டிகள் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மலேசியா கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு வருகை தந்த முகமது சலீம் என்ற நபர் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரால் திருச்சி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். குறித்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் தனது வயிற்றுக்குள் 7 தங்க கட்டிகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

205 கிராம் எடையுள்ள மொத்தம் 7 தங்க கட்டிகளை ஆணுறைக்குள் போட்டு வாழைப்பழத்தில் வைத்து விழுங்கி கடத்தி வந்ததாக தெரிவித்துள்ளார்.விழுங்கிய கட்டிகளை வெளியில் எடுப்பதற்காக அதிகாரிகள் அவரை திருச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்துள்ளது.

சுமார், 3 நாட்களின் பின்னர் அவரது வயிற்றில் இருந்து தங்க கட்டிகள் எடுக்கப்பட்டதாகவும். அதன் மதிப்பு  இந்திய ரூபாவில் 5 இலட்சத்து 96 ஆயிரம் என தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியசோதனைக்கு பின்னர் முகமது கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.