கருத்தரித்த பெண்களுக்கு டபுள்மார்க்கர் பரிசோதனை அவசியமா..?

08 Jan, 2026 | 03:08 PM
image

இன்றைய சூழலில் எம்முடைய உணவு முறையில் ஏற்படுத்திக் கொண்ட மாற்றத்தின் காரணமாக திருமணமான தம்பதிகள் இயற்கையான முறையில் கருதரிப்பதற்கான சதவீதம் குறைந்து வருகிறது.

இதனால் திருமணமான பெண்கள் கருத்தரித்தவுடன் மகப்பேறு மருத்துவ நிபுணர்கள் அதனை உறுதிப்படுத்துவதற்காக பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு பரிந்துரைக்கிறார்கள். இந்தத் தருணத்தில் கருத்தரித்த முதல் மூன்று மாதத்தில் டபுள் மார்க்கர் எனும் பரிசோதனையை மேற்கொள்ளுமாறும் பரிந்துரைக்கிறார்கள். இது ஏன்? என்பது குறித்த விளக்கத்தை பின்வருமாறு அவர்கள் வழங்குகிறார்கள்.

பெண்கள் கருத்தரித்தவுடன் அவர்களுடைய கருத்தரித்ததில் இருந்து 11 மற்றும் 13 வாரங்களில் அவர்களுக்கு வழக்கமான ஸ்கேன் பரிசோதனை மற்றும் குருதி பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

இத்தகைய தருணத்தில் வயிற்றில் வளரும் சிசு மரபணு குறைபாடு காரணமாக டவுன் சிண்ட்ரோம் மற்றும் எட்வர்ட்ஸ் சிண்ட்ரோம் ஆகிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா? இல்லையா? என்பதனை தொடக்க நிலையில் கண்டறிவதற்காக டபுள் மார்கர் எனும் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.

இந்த பரிசோதனை சாதாரண குருதி பரிசோதனையாகும். உயிரி வேதியல் அடிப்படையில் பரிசோதனை செய்து குரோமோசோம்களால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? என்பதை துல்லியமாக அவதானிக்க இயலும். இதனைத் தொடர்ந்து என். டி. ஸ்கேன் என்ற ஸ்கேன் பரிசோதனையும் மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை அவதானிப்பர்.  பின்னர் அதற்குரிய சிகிச்சையையும் , ஆலோசனையையும் வைத்திய நிபுணர்கள் வழங்குவார்கள்.‌

வைத்தியர் யஸாஷ்வினி

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விரை வீக்க பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-07-14 17:28:48
news-image

கோரொய்ட் பிளெக்ஸஸ் சிஸ்ட் எனும் சிசுவின்...

2026-07-13 17:19:36
news-image

மூட்டுகளை பாதுகாக்கும் நவீன சத்திர சிகிச்சை-...

2026-07-11 17:00:24
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பைலோரிக்ஸ்டெனோசிஸ் பாதிப்புக்குரிய...

2026-07-10 15:17:29
news-image

ஹைட்ராடெனிடிஸ் சுப்புராடிவா எனும் நாட்பட்ட தோல்...

2026-07-09 18:34:05
news-image

ஜெனிகுலர் ஒர்டரி எம்போலைசேஷன் எனும் மூட்டு...

2026-07-08 15:00:48
news-image

செரிப்ரோஸ்பைனல் திரவ ரைனோரியா எனும் பாதிப்பிற்குரிய...

2026-07-07 17:15:38
news-image

பிலியரி அட்ரேசியா எனும் பச்சிளம் குழந்தைகளுக்கு...

2026-07-06 15:23:11
news-image

ரெட்டினோபிளாஸ்டோமா எனும் அரிய வகை கண்...

2026-07-04 15:11:03
news-image

ஓலெக்ரானன் எலும்பு முறிவுக்கான நவீன சத்திர...

2026-07-03 17:26:41
news-image

டிஸ்பயோசிஸ் எனும் குடல் பகுதியில் ஏற்படும்...

2026-07-02 17:45:48
news-image

அகில்லெஸ் டெண்டினிடிஸ் எனும் காலில் ஏற்படும்...

2026-07-01 16:08:31