பிரபல மலையாள நடிகை கல்பனா திடீர் மரணம்

Published By: MD.Lucias

25 Jan, 2016 | 11:07 AM
image

பிரபல மலையாள நடிகை கல்பனா ரஞ்சனி இன்று காலமானார்.

 தமிழ் நடிகை ஊர்வசியின் சகோதரியான நடிகை கல்பனா ரஞ்சனி  தமிழில் சின்னவீடு, பம்பல் கே சம்பந்தம், சதி லீலாவதி உள்பட மலையாளம், தெலுங்கு என 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது அவர் தெலுங்கு படம் ஒன்றின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஹைதராபத் சென்று இருந்தார். 

நேற்று படப்பிடிப்பு முடிந்து இரவு பொழுதை கழித்தார். இன்று காலை 6 மணிக்கு படப்பிடிப்புக்கு வர வேண்டியவர் வரவில்லை. இதையடுத்து அவருக்கு பலமுறை தொலைபேசி அழைப்பு விடுத்த போதும் அவர் பதிலளிக்கவில்லை. இதனையடுத்து நேரில் சென்று பார்த்தபோது அவர் உணர்வின்றி கிடந்துள்ளார்.

உடனே அருகில் உள்ள அப்பலோ வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த வைத்தியர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

அவர் மாரடைப்பால் இறந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. கல்பனா திடீர் என்று மரணம் அடைந்தது திரை உலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

கல்பனா மலையாள இயக்குனர் அனில் குமாரை திருமணம் செய்து கடந்த 2012ம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார்.

’தனிசல்ல நிஜன்’ என்ற படத்திற்காக இவர் தேசிய விருது பெற்று உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ராபர் - திரை விமர்சனம்

2025-03-14 18:26:12
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2025-03-14 17:41:17
news-image

ரசிகர்களுக்கும், ஊடகத்திற்கும் நன்றி தெரிவித்த 'எமகாதகி'...

2025-03-13 18:32:12
news-image

இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்ட 'ட்ராமா'...

2025-03-13 18:31:45
news-image

விஜய் அண்டனி நடிக்கும் 'சக்தி திருமகன்'...

2025-03-13 18:25:30
news-image

நடிகை சௌந்தர்யா மரணத்தில் மோகன்பாபுவுக்கு தொடர்பா?...

2025-03-13 10:29:57
news-image

மாதவன் நடிக்கும் 'டெஸ்ட்' படத்தின் சிங்கிள்...

2025-03-12 15:38:17
news-image

இலங்கை மக்கள் அன்பானவர்கள் என கேள்விப்பட்டிருக்கிறேன்;...

2025-03-12 17:05:46
news-image

நடிகை பாவனா நடிக்கும் 'தி டோர்'...

2025-03-12 15:35:09
news-image

படவா - திரைப்பட விமர்சனம்

2025-03-12 11:29:42
news-image

சத்யராஜ் - சசிகுமார் - பரத்...

2025-03-12 21:10:29
news-image

நடிகர் 'கயல்' வின்சென்ட் நடிக்கும் 'அந்தோனி...

2025-03-11 17:36:01