கல்வி சீர்திருத்தங்களில் உள்ள குறைபாடுகள் காரணமாக பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வர எதிர்க்கட்சிகள் தீர்மானம்

07 Jan, 2026 | 05:21 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

தற்போதைய அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்கள் பிள்ளைகளின் மனதிற்கு  பொருத்தமற்ற பல விடயங்களையும், பாட அலகுத் தொகுதிகளில் பல்வேறு பிழைகளைக் கொண்டு காணப்படுவது மற்றும் இது தொடர்பாக சரியான நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட விடயங்களைக் கருத்திற் கொண்டு, கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை எதிர்க்கட்சிகள் கொண்டுவரவுள்ளது.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு கையொப்பங்களைத் திரட்டும் நடவடிக்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில்  புதன்கிழமை (07) பாராளுமன்றத்தில் அமைந்துள்ள  எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆரம்பமானது.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முதலில் கையெழுத்திட்டார்.

தற்போதைய அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தங்கள் பிள்ளைகளின் மனதிற்கு  பொருத்தமற்ற பல விடயங்களையும், பாட அலகுத் தொகுதிகளில் பல்வேறு பிழைகளைக் கொண்டு காணப்படுவது மற்றும் இது தொடர்பாக சரியான நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட விடயங்களைக் கருத்திற் கொண்டு, கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டு வருவது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில்    பாராளுமன்றத்தில் அமைந்துள்ள  எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்   இடம்பெற்றது

 இந்த விசேட கலந்துரையாடலில் ,பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த   கயந்த கருணாதிலக,  ஹர்ஷ டி சில்வா, திலிப் வெதஆராச்சி, சுஜித் சஞ்சய பெரேரா, ஜே.சி அலவத்துவல, அஜித் பி பெரேரா, சத்துர கலப்பதி,  சமிந்திரானி கிரியெல்ல,இம்ரான் மஹ்ரூப், கிங்ஸ் நெல்சன், சித்ரால் பெர்னாண்டோ, ரோஹினி கவிரத்ன,டபிள்யூ. எச். எம். தர்மசேன, ரஞ்சித் மத்தும பண்டார, முஜிபுர் ரஹ்மான், ஜகத் விதான, சுஜீவ சேனசிங்க,பி. ஆரியவன்ச, எஸ்.எம்.மரிக்கார்,தயாசிறி ஜயசேகர ஆகியோரும்

தமிழ் முற்போக்கு கூட்டணியை சேர்ந்த மனோ கணேசன், பழனி திகாம்பரம்,  வே.இராதாகிருஷ்ணன்,புதிய ஜனநாயக முன்னணியை சேர்ந்த ரவி கருணாநாயக்க,  சாமர சம்பத் தசநாயக்க, அனுராத ஜயரத்ன, தமிழரசுக்கட்சியை சேர்ந்த ப . சத்தியலிங்கம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை  சேர்ந்த எம். எஸ். உதுமா லெப்பை ,எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, நிசாம் காரியப்பர் ஆகியோரும் பொதுஜன பெரமுனவின் டி.வி.சானக்க, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் எம். டி. எம். தாஹிர்,சர்வஜன பலயவை சேர்ந்த திலித் ஜயவீர   ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதன்போது இதுதொடர்பில்  ஆழமாக கலந்துரையாடிய பின்னரே   கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை  கொண்டுவர தீர்மானிக்கப்பட்டதுடன் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முதலில் கையெழுத்திட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விமான நிலையத்தில் போதைப்பொருள் மீட்பு: கனடா...

2026-03-10 17:16:54
news-image

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியை சந்தித்தார் சுவிட்சர்லாந்து...

2026-03-10 17:20:08
news-image

இலங்கையின் தோட்டச் சமூகத்தைப் பாதுகாப்பதில் 100...

2026-03-10 16:57:59
news-image

ஈரான் கப்பல் மீதான அமெரிக்கத் தாக்குதல்:...

2026-03-10 17:26:38
news-image

ஒருங்கிணைந்த திட்டமொன்றின் ஊடாக மணல் மாபியாக்களை...

2026-03-10 16:45:54
news-image

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்பு தொடர்பான பாராளுமன்ற...

2026-03-10 16:12:56
news-image

மணல் மாபியாக்களின் செயற்பாடுகளால் மணல் விலை...

2026-03-10 16:53:06
news-image

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பிரதி...

2026-03-10 15:18:26
news-image

யாழில் சைவ ஆலயத்தின் சிலை உடைப்பு...

2026-03-10 14:46:54
news-image

குருக்கள்மடம் மனிதப் புதைகுழியில் முதற்கட்ட அகழ்வுப்...

2026-03-10 14:20:19
news-image

நீர்கொழும்பு மற்றும் கட்டான பகுதிகளுக்கு 16...

2026-03-10 14:41:43
news-image

சர்வதேச மகளிர் தினத்தில் வாழ்வாதாரக் கைமாற்று

2026-03-10 14:16:30