தொடர் இரத்த சர்க்கரை அளவை அவதானிக்கும் கருவியை யார் பாவிக்கலாம்..?

07 Jan, 2026 | 04:48 PM
image

மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வரும் இன்றைய சூழலில் எம்மில் பலரும் மாற்றி அமைத்துக் கொண்ட வாழ்க்கை நடைமுறை- உணவு முறை காரணமாக மிக இளம் வயதிலேயே நீரிழிவு நோயாளிகளாக மாறிவிடுகிறார்கள்.

இந்தத் தருணத்தில் உலக அளவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், இது குறித்த விழிப்புணர்வு மக்களிடத்தில் ஏற்பட்டிருந்தாலும்... இதனை தவிர்த்துக் கொள்வதில் அவர்கள் முழு கவனம் செலுத்துவதில்லை என்றும் சுகாதார துறையினர் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் எம்முடைய உடலில் உள்ள ரத்த சர்க்கரையின் அளவை தொடர்ந்து அவதானிக்க வேண்டும் என வைத்திய நிபுணர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

இதனால் தற்போது ரத்த சர்க்கரையின் அளவை தொடர்ந்து அவதானிக்கும் வகையில் நவீன வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட பிரத்யேக கருவியை தொடர்ந்து பாவிக்க வேண்டும் என வைத்திய நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

குறிப்பாக ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளாதவர்கள் இத்தகைய கருவியை தொடர்ந்து பாவிக்க வேண்டும் என உறுதிப்பட தெரிவிக்கிறார்கள்.

அத்துடன் ரத்த சர்க்கரையின் அளவை தொடர்ந்து அவதானிக்கும் கருவியை டைப் ஒன் சர்க்கரை நோயாளிகள் - கட்டுப்படுத்தப்படாத ரத்த சர்க்கரை பாதிப்பிற்காக இன்சுலின் எனும் சிகிச்சையை மேற்கொண்டிருப்பவர்கள் - இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதற்காக தீவிர சிகிச்சையை மேற்கொண்டிருப்பவர்கள் - கருவுற்றிருக்கும் பெண்மணிகள் - ஆகியோர் இத்தகைய கருவியை தொடர்ந்து வைத்தியர்கள் பரிந்துரைக்கும் காலகட்டம் வரை பாவிக்க வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

நவீன மருத்துவ தொழில் நுட்ப வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் இத்தகைய ரத்த சர்க்கரையின் அளவை தொடர்ந்து அவதானிக்கும் கருவியின் மூலமாக எந்த உணவை நீங்கள் பசியாறும் போது இரத்த சர்க்கரையின் அளவு உயர்கிறது என்பதையும்... எந்த தருணத்தில் உங்களின் ரத்த சர்க்கரையின் அளவு உயர்கிறது என்பதையும்... இதன் மூலம் துல்லியமாக அவதானித்து, அத்தகைய தருணங்களில் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வதற்கான சிகிச்சையை மேற்கொண்டு ஆரோக்கியத்தை முழுமையாக பேண இயலும்.

வைத்தியர் மோகன் தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்டாக்ஹார்ன் கால்குலஸ் : சிறுநீரக பாதிப்பிற்கான...

2026-08-15 17:08:15
news-image

மலக்குடலில் ஏற்படும் கட்டிகளை அகற்றி நிவாரணமளிக்கும்...

2026-08-14 14:28:38
news-image

நாட்பட்ட நோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-08-13 18:12:25
news-image

மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கும் எக்ஸ்ட்ராகார்போரியல்...

2026-08-13 18:14:22
news-image

நுரையீரல் பாதிப்புகளை துல்லியமாக அவதானிக்கும் நவீன...

2026-08-12 16:05:53
news-image

சர்கோயிடோசிஸ் எனும் அரிய பாதிப்பிற்கான நவீன...

2026-08-11 16:51:59
news-image

டகோட்சுபோ கார்டியோமயோபதி எனும் இதய பாதிப்பிற்குரிய...

2026-08-10 15:50:50
news-image

விர்ச்சுவல் ஒட்டிசம் எனும் மெய்நிகர் ஒட்டிச...

2026-08-07 16:13:19
news-image

பித்த நாள அடைப்பை சீராக்கும் நவீன...

2026-08-06 18:37:33
news-image

கார்டியாக் மைக்ஸோமா எனும் இதயத்தில் ஏற்படும்...

2026-08-05 17:02:41
news-image

தசை இறுக்கத்திற்கு நிவாரணமளிக்கும் பனிக்கட்டி குளியல்...

2026-08-04 15:26:44
news-image

ப்ரௌன் ஃபேட் எனும் பழுப்பு கொழுப்பு...

2026-08-01 17:00:28