இலங்கையின் புதிய உள் ளூர் வாகன முன்பதிவு தளமான HelaGo கொழும்பு வாட்டர்ஸ் எட்ஜ் 200க்கும் மேற்பட்ட HelaGo வாகன ஓட்டுனர்கள் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த அறிமுக நிகழ்வு, இலங்கையின் பயணிகளுக்கான நியாயமான வாகன முன்பதிவு சேவை வெளிப்படையான மற்றும் நம்பகத்தன்மை மிக்க தளமாகும். பயணிகள் மற்றும் ஓட்டுனர்களுக்கு ஒரு புதிய அத்தியாயம் ஒன்று ஆரம்பமாகின்றது.
HelaGo, பயணிகளுக்கு குழப்பம் இல்லாத மற்றும் ஓட்டுனர்களுக்கு தெளிவான வாய்ப்புகள் மற்றும் வருமானத்தை உறுதி செய்யும் வெளிப்படையான மற்றும் நியாயமான வாகன முன்பதிவு சூழலை உருவாக்கும் நோக்குடன் போக்குவரத்து துறையில் நுழைந்துள்ளது.
பாரம்பரிய போக்குவரத்து துறை முறைகளில் பயணிகளுக்கு ஒரே XU கட்டணம் வழங்கப்படும் நிலையில், HelaGo அருகிலுள்ள பல ஓட்டுனர்களிடமிருந்து கிடைக்கும் கட்டண முன்மொழிவுகளை பயணிகள் பார்க்க முடியும் மற்றும் தங்களது பட்ஜெட் மற்றும் விருப்பத்திற்கு ஏற்ற கட்டணத்தை தேர்வு செய்யலாம்.
இது பிஸியான நேரங்களில் கட்டண ஏற்ற இறக்கங்கள் மற்றும் பணப்பரிவர்த்தனை தொடர்பான குழப்பங்களை குறைத்து பயணிகளுக்கு அறிவார்ந்த முடிவுகளை எடுக்க உதவுகின்றது.
அறிமுக நிகழ்வில், HelaGo நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி தனிகா பெரேரா தனது “Open & Fair” கட்டண அமைப்பை பற்றி விளக்கிdhர். இதில் கட்டணங்கள் மையமாக கட்டுப்படுத்தப்படாமல், ஓட்டுனர் பயணிகளுக்கு இடையிலான தெளிவான உடன்படிக்கையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றது.
இது எதிர்பாராத கட்டண உயர்வுகளை குறைத்து, பயணிகள் முன் கட்டணங்களை பார்க்கவும் ஒப்பிடவும் முடியும் என்பதால் நம்பிக்கையும் தெளிவும் அதிகரிக்கப்படுகின்றது.
HelaGo, பணம் மற்றும் டிஜிட்டல் கட்டணங்களையும் ஆதரிக்கிறது, இது பயணிகளுக்கு விருப்பமான முறையில் பணம் செலுத்த அனுமதிப்பதோடு, கட்டண தொடர்பான குழப்பங்களை குறைக்கும் மற்றும் பயண வசதியையும் மேம்படுத்துகிd;றது.
இந்த அறிமுகம், HelaGo நிறுவனம் David Pieris Group உடன் இணைந்து அமெரிக்க டாலர் 1 மில்லியன் துவக்க நிதியை பெற்றதையடுத்து நடைபெறுகிறது.
David Pieris Group, இலங்கையின் மதிப்புமிக்க போக்குவரத்து துறை குழுக்களில் ஒன்றாக இருப்பதால், இந்த கூட்டணி HelaGo-வின் தேசிய அளவிலான விரிவாக்கத்தையும், செயல்பாட்டு ஆதரவையும், ஓட்டுனர் -பயணி ஏற்றுக்கொள்ளுதலையும் வலுப்படுத்துகின்றது.
இரு நிறுவனங்களும் 100 சதவீத இலங்கை உரிமையிலானவை என்பதால், இது உள்ளூர் புதுமை மற்றும் தேசிய அளவிலான டிஜிட்டல் தீர்வுகளுக்கான முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது.
HelaGo தற்போது Android மற்றும் IOS தளங்களில் கிடைக்கின்றது. ஏற்கனவே Helakuru பயன்படுத்துபவர்கள், Helakuru Superapp மூலம் நேரடியாக பயணங்களை முன்பதிவு செய்யலாம்.
Helakuru பயன்படுத்தாதவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்காக, புதிய தனிப்பட்ட வாகன முன்பதிவு தளமான “Go by HelaGo” Google Play Store மற்றும் Apple App Store இல் கிடைக்கின்றது.
ஜனவரி 6 முதல் மேல் மாகணத்தில் சேவை தொடங்கி, நாடு முழுவதும் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்ட நிலையில், HelaGo இலங்கையில் புதிய வாகன முன்பதிவு காலத்தை உருவாக்கும் நோக்குடன் பயணிகள் மற்றும் ஓட்டுனர்களுக்கும் நியாயமான, தெளிவான மற்றும் வெளிப்படையான பயண அனுபவத்தை வழங்க முனைகின்றது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM