தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன - குருந்துகஹாஹெத்தமவுக்கு இடையில் 55.4 எல் மயில் கல்லிற்கருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து மாத்தறைக்கு சென்று கொண்டிருந்த வேன் ஒன்று அதே திசையில் சென்றுக்கொண்டிருந்த லொறியொன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது, வேன் சாரதிக்கு வாகனத்தை கட்டுபடுத்த முடியாமல் லொறியுடன் மோதிய நிலையில் குறித்த வேன் வீதியை விட்டு விலகி பாதுகாப்பு வேலியையும் உடைத்துக் கொண்டு பள்ளத்தில் பாய்ந்துள்ளது.

குறித்த விபத்தில் வேனின் சாரதி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர் பொரலெஸ்வத்த அக்குரஸ்ஸ பகுதியைச்சேர்ந்த 45 வயதுடைய ஹேவதேவ பன்துல என பொலிஸார் தெரிவித்தனர்.