2024 - 25க்கான Business Today’s Top 40 பட்டியலில் கொமர்ஷல் வங்கி முதலிடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டது

06 Jan, 2026 | 07:06 PM
image

கொமர்ஷல் வங்கி 2024-25ஆம் ஆண்டிற்கான பிசினஸ் டுடே டொப் 40 (Business Today Top 40) பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது, இதன்மூலம் கொமர்ஷல் வங்கி இலங்கையின் சிறப்பாகச் செயல்படும் வங்கியாகவும், நாட்டின் முதல் ஐந்து வலுவான நிறுவனங்களில் ஒன்றாகவும் தொடர்ந்து 17வது ஆண்டாக தனது நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

பிசினஸ் டுடேயானது வங்கிக்கு 37.65 என்ற மொத்த மதிப்பெண்ணை வழங்கியதன் மூலம் வங்கியானது, இலங்கையின் முன்னணி நிறுவனங்களின் சமீபத்திய தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது.

பிசினஸ் டுடேயானது தரவரிசைப் பட்டியலை வழங்குகையில், கொமர்ஷல் வங்கியை “ஒரு வரையறுக்கப்பட்ட வருடத்திற்குப் பிறகு மீள்தன்மை மற்றும் புதுப்பித்தலின் கலங்கரை விளக்கம்” என்று பாராட்டியுள்ளது. 

2024ஆம் ஆண்டு மூலோபாய மாற்றம், கட்டுப்பாடான செயல்பாடு மற்றும் நீண்டகால நிலையான வளர்ச்சிக்கு எப்போதும் குறையாத அர்ப்பணிப்பு ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்டதாகவும் அது குறிப்பிட்டது. 

இந்த விருதானது வங்கியின் முக்கிய வர்த்தகப் பிரிவுகள் முழுவதிலும் காணப்படும் வலிமையையும், வாடிக்கையாளர்கள் மீது அதிகரித்த கவனத்தையும், மேலும் இலங்கையின் மிகவும் பொறுமைமிக்க மற்றும் வாடிக்கையாளர் மையப்படுத்தப்பட்ட நிதி நிறுவனம் என்ற அதன் நற்பெயரை உறுதிப்படுத்திய அதன் செயல்திறன் வளர்ச்சியையும் அங்கீகரித்துள்ளது.

SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100மூ கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும்.

கொமர்ஷல் வங்கியின் தலைவர் திரு. ஷர்ஹான் முஹ்சீன் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. சனத் மனதுங்க.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்