போதைப்பொருட்களுடன் வர்த்தகர்கள் இருவர் கைது!

06 Jan, 2026 | 03:32 PM
image

சுமார் 24 லட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதை பொருட்களுடன் இரண்டு போதை பொருள் வர்த்தகர்கள் காத்தான்குடி பொலிஸாரினால் நேற்று திங்கட்கிழமை (5) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 100 கிராம் ஐஸ் மற்றும் 10 கிராம் ஹெரோயின் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன .

கொழும்பிலிருந்து போதை பொருட்களை கடத்தி வந்து கல்லடியில் உள்ள விடுதியொன்றில் வைத்து விற்பனை செய்து வரும் குறித்த நபர்கள் பிரபல போதை வியாபாரிகள் என தெரிவிக்கப்படுகிறது. 

கல்லடியிலிருந்து சம்மாந்துறைக்கு குறித்த போதைப் பொருட்களை எடுத்துச் சென்ற நிலையில் பொலிஸாரினால் இவர்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர். 

போதைப் பொருட்களை கடத்துவதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது 

குறித்த நபர்கள் 26 மற்றும் 29 வயதுடைய நபர்கள் என தெரிவித்த பொலிஸார் வாழைச்சேனையை சேர்ந்தவர்கள் எனவும்  மேலும் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களை மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் கொண்டுள்ளது மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசாங்கத்தின் முறையற்ற திட்டமிடலால் மக்கள் மீது...

2026-03-10 18:03:54
news-image

அரசாங்கம் எரிபொருள் விலை அதிகரிப்பின் ஊடாக...

2026-03-10 17:50:29
news-image

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கான...

2026-03-10 17:53:16
news-image

விமான நிலையத்தில் போதைப்பொருள் மீட்பு: கனடா...

2026-03-10 17:16:54
news-image

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியை சந்தித்தார் சுவிட்சர்லாந்து...

2026-03-10 17:20:08
news-image

இலங்கையின் தோட்டச் சமூகத்தைப் பாதுகாப்பதில் 100...

2026-03-10 16:57:59
news-image

ஈரான் கப்பல் மீதான அமெரிக்கத் தாக்குதல்:...

2026-03-10 17:26:38
news-image

ஒருங்கிணைந்த திட்டமொன்றின் ஊடாக மணல் மாபியாக்களை...

2026-03-10 16:45:54
news-image

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்பு தொடர்பான பாராளுமன்ற...

2026-03-10 16:12:56
news-image

மணல் மாபியாக்களின் செயற்பாடுகளால் மணல் விலை...

2026-03-10 16:53:06
news-image

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பிரதி...

2026-03-10 15:18:26
news-image

யாழில் சைவ ஆலயத்தின் சிலை உடைப்பு...

2026-03-10 14:46:54