வென்னப்புவ–லுனுவில கடல் பகுதியில் பீடி இலைகளுடன் இருவர் கைது!

06 Jan, 2026 | 03:23 PM
image

வென்னப்புவ, லுனுவில கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் ஜனவரி 03 ஆம் திகதி நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடத்தப்பட்ட சுமார் 554 கிலோகிராம் பீடி இலைகளுடன் ஒரு டிங்கி (01) படகுடன்   இரண்டு  சந்தேக நபர்கள் கைது செயய்ப்பட்டுள்ளனர்.

அதன்படி, வென்னப்புவ, லுனுவில கடல் பகுதியில் மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான ஒரு படகு நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கடல் பகுதி வழியாக நிலத்தை நோக்கி பயணித்த சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்று கண்காணிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

அப்போது, சட்டவிரோதமாக 18 பொதிகளில்  பொதிச்செய்து கொண்டு வரப்பட்ட சுமார் 554 கிலோகிராம் பீடி இலைகளும் 01  டிங்கி படகு மற்றும் இரண்டு சந்தேக நபர்கள் (02) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்.

மேலும், இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் 19 மற்றும் 29 வயதுடைய கற்பிட்டியின் ஆனவாசலை மற்றும் ஜனசவிபுர பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.

சந்தேக நபர்கள், பீடி இலைகள் மற்றும் டிங்கி படகுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க மற்றும் கலால் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசின் பொதுச் சேவை வழங்கல்களை வினைத்திறன்...

2026-05-09 20:58:51
news-image

கபில சந்திரசேனவின் பிரேத பரிசோதனை அறிக்கை...

2026-05-09 20:55:37
news-image

யாழ் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சிய...

2026-05-09 20:56:13
news-image

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையை அரசாங்கம் திட்டமிட்டு...

2026-05-09 19:05:16
news-image

பெலவத்தை உத்தரவுக்கமையவே என்னிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது...

2026-05-09 18:40:18
news-image

மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம் :...

2026-05-09 18:41:54
news-image

இளம் குடும்பஸ்தர் கடத்தித் தாக்கப்பட்டு 3...

2026-05-09 20:18:52
news-image

அரசியல் பழிவாங்கல்களுக்காக அரச பொறிமுறை கீழ்த்தரமான...

2026-05-09 17:05:37
news-image

ஹட்டன் வெலிஓயாவில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

2026-05-09 21:00:11
news-image

பிரதமருக்கும் வியட்நாம் ஜனாதிபதிக்கும் இடையில் இருதரப்பு...

2026-05-09 20:25:44
news-image

இலங்கை - வியட்நாம் இடையில் வர்த்தக,...

2026-05-09 21:02:23
news-image

மரியா காஸ்டிலோ - அருண் ஹேமச்சந்திர...

2026-05-09 20:47:28