அரசியலில் பெண்களின் வகிபாகத்தினை அதிகரித்தல், பெண்கள் தொடர்பில் இயங்குகின்ற சிவில் சமூக அமைப்புக்கிடையில் வலையமைப்பினை உருவாக்குதல் போன்ற விடயங்களை முன்னெடுப்பது தொடர்பில் Search for Common Ground – SFCG அமைப்பானது கிழக்கு மாகாணத்தில் செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இதற்கான நிதியுதவியினை UNDP வழங்குகின்றது.
இத்திட்டத்தின் முதற்கட்டமாக நிகழ்வுகள் கடந்த 16.12.2025 அன்று அரசியலில் பங்கேற்கும் பெண்களுக்கான செயலமர்வும் 17.12.2025 அன்று சிவில், சமூக பிரதிநிதிகளுக்குமான செயலமர்வும் இடம்பெற்றன. இதன் தொடர்ச்சியாக அம்பாறை மாவட்ட பிரதிநிதிகளுக்கான அமர்வுகள் கடந்த 20.12.2025 மற்றும் 23.12.2025 ஆகிய தினங்களில் இடம்பெற்றிருந்தன.
இவ் நிகழ்வுகளில் பங்கேற்ற பிரதிநிதிகள் தமக்கு அரசியலிலும், சமூகத்திலும் காணப்படுகின்ற சவால்களையும் அவற்றினை எதிர்கொள்வதில் உள்ள சிரமமான அனுபவங்களினையும் பகிர்ந்துகொண்டனர். மேலும் இவற்றினை எதிர்காலத்தில் நிவர்த்திப்பதற்கான சில விடயங்களையும் முன்வைத்தனர்.
அரசியலில் பெண்களின் பங்களிப்பினையும் பாதுகாப்பினையும் உறுதிசெய்யும் வகையில் பரிந்துரைகள் முன்வைக்கப்படல் வேண்டும்
அரசியல் கொள்கைகள், பரந்துரைகள் மற்றும் சட்டவரைபுகள் குறித்த விழிப்புணர்வு, தெளிவூட்டல்கள் வழங்கப்படுவதற்கான நிகழ்வுகள் ஓழுங்கமைப்பு செய்யப்படல் வேண்டும்.
பெண்களுக்கெதிரான வன்முறைகள் இடம்பெறும் போது அவர்கள் அதனை வெளிக்கொணர்வதற்கான பாதுகாப்பான சூழல் காணப்பட வேண்டும்.
இணையவழி வெறுப்புப்பேச்சுக்கள் மற்றும் சமூக ஊடகங்களின் பாவனை , பாதுகாப்பு குறித்த பயிற்சிகள் பெண்களுக்கு வழங்கப்படல் வேண்டும்.
பொருளாதார ரீதியான வலுப்படுத்தல் தற்போது பெண்களுக்கு தேவையாகவுள்ளது. பொருளாதார ரீதியாக பெண்கள் வலுப்படுத்தப்படும் போது சமூக மற்றும் அரசியல் சார் பங்கேற்புகள் அதிகரிக்கப்படும்.
என்பவை போன்ற விடயங்கள் அடையாளப்படுத்தப்பட்டன. எதிர்காலத்திலும் தாம் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அமைப்புக்கள் மற்றும் குழுக்கள் ஊடாக பெண்களது வகிபாகங்களையும் வலுவூட்டல்களையும் முன்னெடுப்பது குறித்தும் இச்செயலமர்வுகளின் போது கருத்தாடல்கள் இடம்பெற்றன. இச்செயலமர்வுகளுடன் மட்டுப்படுத்தப்படாமல் தொடர்ச்சியான நிகழ்வுகளை முன்னெடுப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
SFCG நிறுவனமானது கடந்த காலங்களிலும் இளம்பெண்களை சமூக பொருளாதார ரீதியில் வலுவூட்டல் தொடர்பில் திட்டங்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM