விறுவிறுப்பு இல்­லாமல் சென்­று­கொண்­டி­ருக்­கி­றது இலங்கை – இந்­திய அணி­க­ளுக்­கி­டை­யி­லான கிரிக்கெட் தொடர். இதற்குக் காரணம், இந்­தியா பல­மான அணி என்­ப­தல்ல, இலங்கை படு­ப­ல­வீ­ன­மான அணி­யாக இருப்­பதே. 

இந்த இரு அணிகள் மட்­டு­மல்ல, சமீப காலங்­களில் பெரும்­பாலும் ஒரு­தலை போட்­டி­யாகவு பல போட்டிகள் நடை­பெற்று வரு­கின்­றன. போர்க்­கு­ணம்­கொண்டு கடைசி ஓவரின் கடைசிப் பந்து வரை போராடும் அணி­களும் இப்­போது குறை­வுதான். 

தோல்­வியின் விளிம்­பி­லி­ருந்து மீண்டு, கடும் சவால் தரும் அணி­க­ளையும் இங்கே காண முடி­ய­வில்லை. பங்­க­ளாதேஷ், ஆப்­கா­னிஸ்தான் போன்ற ஓரிரு அணிகள் மட்­டுமே கடைசிவரை போராட்ட குணத்­துடன் ஆடி வருகின்றன. 

தற்­போது இலங்கை அணி சற்று வீழ்ச்சிப் பாதை­யில்தான் சென்­று­கொண்­டி­ருக்­கி­றது. அதை மறுப்­ப­தற்கு இல்லை. 

தேவை­யான அனைத்தும் இருந்தும் இலங்கை அணி இப்­படி சோடை போகக் காரணம் என்ன? அதில்தான் பிரச்சினையே இருக்கிறது. அந்த காரணம் என்ன என்று யாருக்கும் புலப்படவில்லை.

இந்­நி­லையில் இலங்கை – இந்­திய அணிகள் மோதும் இரண்­டா­வது ஒருநாள் போட்டி இன்று பல்­லே­க­லயில் பிற்­பகல் 2.30 மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

இன்­றைய போட்டி இலங்கை அணிக்கு 800 ஆவது ஒருநாள் போட்­டி­யாகும். அதனால் இன்­றைய போட்­டியில் இலங்கை அணி நிச்­சயம் வெற்­றி­பெற வேண்­டிய எதிர்­பார்ப்பில் உள்ளது.

விராட் கோஹ்லி தலை­மை­யி­லான இந்­திய கிரிக்கெட் அணி இலங்­கையில் சுற்­றுப்­ப­யணம் செய்து விளை­யாடி வரு­கி­றது. இரு அணி­க­ளுக்­கி­டை­யி­லான டெஸ்ட் தொடரை இந்­தியா 3–-0 என்ற கணக்கில் முழு­மை­யாக கைப்­பற்­றி­யது.

5 போட்­டிகள் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடரில் தம்­புள்­ளையில் நடை­பெற்ற முதல் போட்­டியில் இந்­தியா 9 விக்­கெட்­டுக்கள் வித்­தி­யா­சத்தில் வெற்றி பெற்­றது.

இந்தத் தொடரின் இரண்­டா­வது ஒருநாள் போட்டி இன்று நடை­பெ­ற­வுள்­ளது. இந்­திய அணி துடுப்­பாட்ட வரி­சையில் பலம் பொருந்­தி­ய­தாக இருக்­கி­றது. அதேபோல் பந்­து­வீச்­சிலும் பல­மா­கவே இருக்­கி­றது.

இதனால் இந்­தியா சம பலத்­துடன் திகழ்­கி­றது. இன்­றைய போட்­டியில் வென்று 2ஆ-வது வெற்­றியை பதிவு செய்யும் முனைப்பில் இருக்­கி­றது இந்­தியா.

உபுல் தரங்க தலை­மை­யி­லான இலங்கை அணி முதல் ஆட்­டத்தில் தோற்­றதால் வெற்றி நெருக்­க­டியில் உள்­ளது. இலங்கை அணியின் திக் ­வெல்ல, குண­தி­லக்க, குசல் மெண்டிஸ், மெத்­தியூஸ், கபு­கெ­தர, திஸர பெரேரா, மலிங்க, சந்­தகான், போன்ற வீரர்கள் உள்­ளனர்.

ஆனாலும் இலங்கை அணி நிலை­யான ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்த தவ­றி­வ­ரு­கி­றது. முதல் போட்­டியில் தொடக்­கத்தை சிறப்­பாக கண்ட அந்த அணி அதன்பின் விக்­கெட்­டு­களை மள­ம­ள­வென பறி கொடுத்­தது.

இதனால் துடுப்­பாட்­டத்தில்  கவனம் செலுத்த வேண்­டிய கட்­டா­யத்தில் இருக்­கி­றது. அது­மட்­டு­மல்ல, முதல் போட்­டியில் இந்­தி­யா­விடம் அடைந்த தோல்­விக்குப் பிறகு ரசி­கர்­களின் கொந்­த­ளிப்­பாலும் இலங்கை அணி மன­ரீ­தி­யாக சற்று தொய்வை அடைந்­துள்­ளது. 

ஏற்கனவே இலங்கை அணியின் மனஉறுதியை மேம்படுத்த வேண்டும். என்றும் இலங்கை கிரிக்கெட் வல் லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர். எப்படியிருந்தாலும் இன்றைய போட்டியில் தோல்விக்கு பதிலடி கொடுக்க இலங்கை நிச்சயம் முயற்சிக்கும். என்றாலும் வலுவான இந்தியாவை வீழ்த்த போராட வேண்டியிருக்கும்.