ஸ்பைனல் கேனல் ஸ்டெனோசிஸ் எனும் பாதிப்பிற்கான நவீன சத்திர சிகிச்சை

05 Jan, 2026 | 05:03 PM
image

இன்றைய சூழலில் எம்மில் பலரும் தங்களுடைய வாழ்க்கை நடைமுறையையும் , உணவு முறையையும் மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக எம்முடைய குடும்பங்களில் உள்ள மூத்த உறுப்பினர்களின் நாளாந்த இயல்பான இயக்கம் என்பது குறைந்துவிட்டது.

அவர்களில் பலருக்கும் திடீரென்று வீட்டிற்குள் நடப்பதற்கும், மாடி படியில் ஏறி இறங்குவதும் கடினமாக மாறிவிடுகிறது. சிலருக்கு ஐந்து நிமிடம் நடந்தால்.. சோர்வும், பலவீனமும் ஏற்படுகிறது. இத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருந்தால்... அவர்களுக்கு ஸ்பைனல் கேனல் ஸ்டெனோசிஸ் எனப்படும் முதுகெலும்பு கால்வாய் பகுதி இயல்பான அளவைவிட சுருக்கம் அடைந்தோ..சேதமடைந்தோ இருக்கலாம் என அவதானிக்க வேண்டும். இத்தகைய தருணத்தில் நோயாளிகளுக்கு நவீன மருத்துவ தொழில் நுட்பங்களுடன் கூடிய பிரத்யேக சத்திர  சிகிச்சையை வழங்கி நிவாரணம் அளிக்கப்படுகிறது என வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.

எம்முடைய முதுகெலும்பு-  தண்டுவடம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் நரம்புகள் செல்லும் ஒரு பிரத்யேக பாதை உண்டு. இந்தப் பாதையின் அளவு இயல்பான அளவை விட சுருக்கம் ஏற்பட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ முதுகுத்தண்டு மற்றும் நரம்புகளை அழுத்த தொடங்கும். இதன் காரணமாக வலி, உணர்வின்மை, தசைப் பலவீனம், கூச்ச உணர்வு போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

சிலருக்கு இவை கழுத்துப் பகுதியிலும், சிலருக்கு கீழ் முதுகு பகுதியில் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். இத்தகைய நிலையில் உள்ள நோயாளிகள் நடப்பதற்கும், நிற்பதற்கும் பாரிய அசௌகரியங்கள் ஏற்படக்கூடும். பல தருணங்களில் நடக்க இயலாத நிலையிலான வலியை அனுபவிப்பார்கள்.

இவர்களுக்கு வைத்தியர்கள் எக்ஸ்ரே மற்றும் எம் ஆர் ஐ ஸ்கேன் பரிசோதனை செய்து பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்து அவர்களுக்கு நவீன சத்திர சிகிச்சையை மேற்கொள்வார்கள். இதன் மூலம் அங்கு ஏற்பட்டிருக்கும் முதுகெலும்பு கால்வாய் சீரமைக்கப்படுவதுடன், அதன் காரணமாக நரம்புகளுக்கும் முதுகெலும்பிற்கும் ஏற்பட்டிருக்கும் அழுத்தத்தையும் குறைப்பார்கள். இதைத் தொடர்ந்து நிவாரணம் பெற்று கால் வலியில் இருந்து குணமடைந்து நடக்க தொடங்குவார்கள்.

வைத்தியர் அருண் விக்னேஷ் தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இதய செயலிழப்பை ஏற்படுத்தும் பொலிசித்தீமியா..!?

2026-02-12 14:42:46
news-image

ஒவ்வாமையினால் ஏற்படும் கண் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2026-02-11 17:03:30
news-image

கேண்டிடியாசிஸ் எனும் பாதிப்பிற்கான நவீன சிகிச்சை

2026-02-10 15:00:08
news-image

ஓட்டோஸ்கிளிரோசிஸ் எனும் கேட்கும் திறன் பாதிப்பிற்குரிய...

2026-02-09 18:19:16
news-image

சுப்பீரியர் வேனா காவா சிண்ட்ரோம் எனும்...

2026-02-07 15:10:23
news-image

நுரையீரல் பாதிப்புகளை துல்லியமாக அவதானிக்கும் நவீன...

2026-02-06 17:07:16
news-image

மன அழுத்தத்தை குறைக்கும் நவீன சிகிச்சை

2026-02-05 15:27:13
news-image

கோசிடினியா எனும் வால் எலும்பு வலி...

2026-02-04 15:21:40
news-image

குருதி உறைவு பாதிப்பை துல்லியமாக அவதானிக்கும்...

2026-02-04 04:08:54
news-image

பிளசன்டா ப்ரிவியா எனும் நஞ்சுக்கொடி பாதிப்பிற்குரிய...

2026-02-02 16:08:16
news-image

நாட்பட்ட கல்லீரல் செயலிழப்பு நோய் பாதிப்பிற்குரிய...

2026-01-31 16:16:40
news-image

சிஸ்டமிக் லூபஸ் எரிதிமடோசஸ் எனும் பாதிப்பிற்கு...

2026-01-30 17:35:52