இரா­ணு­வத்­தி­னரின் கட்­டுப்­பாட்டில் இருக்கும் நிலங்­களை மீட்டுத் தரு­வ­தாக முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க உறு­தி­மொழி வழங்­கி­யுள்ளார்.

கேப்­பாப்­பு­லவு மக்­களின் குழு­விற்கும், முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்­க­விற்கும் இடை­யி­லான சந்­திப்பு நேற்றுமுன்தினம் இடம்­பெற்­றது.

அவரின் அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற இச்­சந்­திப்பில், பாரா­ளு­மன்றக் குழுக்­களின் பிரதி தவி­சாளர் செல்வம் அடைக்­க­ல­நாதன், பாராளு­மன்ற உறுப்­பினர் கோடீஸ்­வரன், பாராளு­மன்ற குழுக்­களின் பிரதி தவி­சா­ளரின் செய­லாளர் சுரேந்­திரன் ஆகியோர் கலந்து கொண்­டி­ருந்­தனர். இதன்போது நீண்ட நாட்­க­ளாக போராடும் மக்­க­ளுக்கு தீர்­வினைப் பெற்றுக்கொடுப்­பது குறித்து உறுதிமொழி வழங்­கி­யுள்ள முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா, இப் பிரச்சினை குறித்து தொலைபேசி வாயிலாக இராணுவத் தளபதியுடனும் கலந்துரையாடியுள்ளார்.