முச்­சக்­கரவண்டி சேவைகள் மற்றும் பாட­சாலை வேன்  சேவைகள் ஆகி­ய­வற்றின் தரத்­தினை உள்­ள­டக்­கிய ஆலோ­சனை மற்றும் சட்டக் கோவை­யொன்­றினை தயா­ரிப்­ப­தற்கு அவ­சி­ய­மான தொழில்­நுட்ப ஒத்­து­ழைப்­பினை பெற்றுக் கொடுக்கும் நோக்கில்  தேசிய தொழில்­நுட்ப குழு­வொன்­றினை நிய­மிக்க  அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ள­தாக  அமைச்­சரும், அமைச்­ச­ரவைப் பேச்­சா­ள­ரு­மான கயந்த கரு­ணா­தி­லக்க தெரி­வித்தார். 

அர­சாங்கத் தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற  வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்­பில்­ எ­ழுப்­பப்­பட்ட கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்,

தற்­போது தர­மற்ற முறையில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் மக்கள் போக்­கு­வ­ரத்து முச்­சக்­க­ர­வண்டி சேவைகள் மற்றும் பாட­சாலை மாண­வர்கள் போக்­கு­வ­ரத்து செய்­கின்ற வேன் சேவைகளின் தரத்­தினை விருத்தி செய்­வதன் அவ­சியம்  கவ­னத்திற் கொள்­ளப்­பட்­டுள்­ளது. 

அது தொடர்பில் பின்­பற்­றப்­ப­டு­வ­தற்கு  உகந்த செயன்­மு­றைகள் தொடர்பில் ஆராய அமைச்­ச­ர­வை­யினால் நிய­மிக்­கப்­பட்ட அதி­கா­ரிகள் குழுவின் சிபாரிசின் அடிப்­ப­டையில் பின்­வரும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வது தொடர்பில் போக்­கு­வ­ரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்  நிமல் சிறி­பால டி சில்வா வினால்  முன்­வைக்­கப்­பட்ட யோச­னை­க­ளுக்கு அமைச்­ச­ர­வையின் அங்­கீ­காரம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

அர­சி­ய­ல­மைப்பின் உறுப்­பு­ரை­களின் படி இவ்­வி­ட­யத்­து­றை­யா­னது மாகாண சபை­க­ளுக்கு உரித்­தான விட­ய­ப­ரப்பு என்­ப­தனை கவ­னத்திற் கொள்ளல்.இவ்­வி­ரண்டு சேவை­க­ளி­னதும் ஆகக் குறைந்த தரத்­தினை உள்­ள­டக்­கிய ஆலோ­சனை மற்றும் சட்டக் கோவை­யொன்­றினை தயா­ரிப்­ப­தற்கு அவ­சி­ய­மான தொழில்­நுட்ப ஒத்­து­ழைப்­பினை பெற்றுக் கொடுப்­ப­தற்கு தேசிய தொழில்­நுட்ப குழு­வொன்­றினை நிய­மித்தல்.பாது­காப்­பற்ற போக்­கு­வ­ரத்து முறை­யான முச்சக்கரவண்டி பயன்பாட்டினை குறைத்து, பாதுகாப்பான வாடகை போக்குவரத்து சாதனங்களுக்கு பிரவேசிக்கும் அரசாங்கத்தின் நீண்டகால கொள்கையினை பின்பற்றுதல் ஆகிய  பரிந்துரைகளுக்கு  அனுமதி வழங்கப்பட்டுள்ளது.