ஈரா­னுக்கு முக்­கி­யத்­துவம் மிக்க விஜ­யத்தை மேற்­கொண்டு சென்­றுள்ள சீன ஜனா­தி­பதி ஸி ஜின்பிங், அந்­நாட்டு ஜனா­தி­பதி ஹஸன் ரோவ்­ஹா­னி­யுடன் பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்டார்.

ஈரா­னுக்கு எதி­ரான சர்­வ­தேச தடைகள் நீக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து அந்­நாட்­டிற்கு விஜயம் செய்த முத­லா­வது வெளி­நாட்டுத் தலைவர் என்ற பெயரை சீன ஜனா­தி­பதி பெறு­கிறார்.

மேற்­படி சந்­திப்பின் போது இரு நாட்டுத் தலை­வர்­களும் பொரு­ளா­தாரம் மற்றும் அர­சியல் உற­வுகள் என்­பன குறித்து கலந்­து­ரை­யா­டி­யுள்­ளனர்.

600 பில்­லியன் அமெ­ரிக்க டொல­ராக வர்த்­த­கத்தை ஊக்­கு­வித்தல் உள்­ள­டங்­க­லாக 17 உடன்­ப­டிக்­கை­களில் சீன மற்றும் ஈரா­னிய ஜனா­தி­ப­திகள் கைச்­சாத்­திட்­டுள்­ளனர்.

இரு நாடு­க­ளுக்­கு­மி­டை­யி­லான தந்­தி­ரோ­பாய உற­வுகள் தொடர்பில் பரந்­த­ள­வான உடன்­ப­டிக்­கை­யொன்றில் தானும் சீன ஜனா­தி­ப­தியும் கைச்­சாத்­திட்­ட­தாக ரோவ்­ஹானி தெரி­வித்தார்.

அத்­துடன் விஞ்­ஞானம், நவீன தொழில்­நுட்பம், கலா­சாரம், சுற்­றுலாத் துறை, பாது­காப்பு, பாது­காப்புப் பிரச்­சி­னைகள் மற்றும் மத்­திய கிழக்­கி­லான ஸ்திரத்­தன்­மை­யின்மை என்­பன குறித்தும் இரு தலை­வர்­களும் கலந்­து­ரை­யா­டி­யுள்­ளனர்.

சீன ஜனா­தி­பதி இந்த விஜ­யத்தின் போது ஈரா­னிய உச்ச நிலைத் தலைவர் ஆய­துல்லாஹ் அலி கமெய்­னி­யையும் சந்­தித்து உரை­யா­ட­வுள்­ள­தாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் கடந்த ஒரு தசாப்த காலப் பகுதியில் ஈரானுக்கு விஜயம் செய்த முதலாவது சீன ஜனாதிபதியாக விளங்குகின்றார்.