நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களை அதி­க­ரிக்க நட­வ­டிக்கை

24 Aug, 2017 | 01:17 PM
image

நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கப்­படவுள்­ளது. நாம் விடுத்த கோரிக்­கைக்கு ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் அனு­மதி வழங்­கி­யுள்­ளனர். ஆகவே இது மலை­யக மக்­க­ளுக்கு பெரும் பக்க பல­மாகும். அத்­துடன் இது ஜன­நா­ய­கத்­திற்கு கிடைத்த பாரிய வெற்­றி­யாகும் என்று  தமிழ் முற்­போக்கு  கூட்­டணி தெரி­வித்­தது.

இப்­பி­ரச்­சினை நீண்ட கால­மாக இருந்து வந்­தது. . ஆனால் குறித்த பிரச்­சி­னையை தீர்க்க எந்த அர­சாங்­கமும் முன்­வ­ர­வில்லை. அர­சாங்­கங்­களின் மீது குறை கூறு­வதில் அர்த்­த­மில்லை. அப்­போது இருந்த அமைச்­சர்­க­ளுக்கே இது குறித்து செய­லாற்ற முடி­யாது போனது என்றும் அக்­கட்சி சாடி­யது.

தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின்  விசேட ஊட­க­வி­ய­லாளர் மாநாடு நேற்று பாரா­ளு­மன்ற கட்­ட­டத்­தொ­கு­தியில் நடை­பெற்­றது. இதன்­போது முன்­ன­ணியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான மனோ கணேசன்,   உப தலை­வரும்  அமைச்­ச­ரு­மான   பழனி திகாம்­பரம்,  உப தலை­வரும்  இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான  வி.இரா­தா­கி­ருஷ்ணன், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான மயில்­வா­கனம் தில­கராஜ், அர­விந்த குமார் மற்றும் பிய­சேன ஆகி­யோரும்  கலந்து கொண்­டனர்.

இங்கு அமைச்சர் மனோ கணேசன் குறிப்­பி­டு­கையில்,

நாளை ( இன்று  வியா­ழக்­கி­ழமை) உள்­ளூ­ராட்சி மன்ற திருத்­த­தச்­சட்ட மூலம் பாரா­ளு­மன்­றத்தில் விவா­தத்­திற்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்டு நிறை­வேற்­ற­ப­ட­வுள்­ளது.  இதன்­போது எமது திருத்­தங்­களை நாம் முன்­வைக்­க­வுள்ளோம். 

இந்­நி­லையில் பாரா­ளு­மன்றம் ,மாகாண சபை மற்றும் பிர­தேச சபைகள் நாட்டில் உள்­ளன. இது ஜன­நா­ய­கத்­திற்கு வலு­சேர்க்கும் நிறு­வ­னங்­க­ளாகும். இவற்றில் மக்­களின்   அடிப்­படைத் தேவை­களைப் பூர்த்தி செய்யும்  அமைப்­புக்­க­ளாக உள்­ளூ­ராட்சி மன்­றங்­களைக் குறிப்­பி­டலாம். இதன் மூல­மா­கவே கிராம மக்­களின் பிரச்­சி­னைக்கு தீர்வு வழங்­கப்­ப­டு­கின்­றன. 

இதன்­படி நுவ­ரெ­லியா மாவட்­டத்தை பொறுத்­த­வ­ரையில் 5 பிர­தேச சபைகள் உள்­ளன. மாந­கர சபை அடங்­க­ளான மொத்தம் 8 உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் உள்­ளன. எனினும் நாட்டில் 10 ஆயிரம் அல்­லது8 ஆயிரம் பேர் கொண்ட பிரி­வுகள் பிர­தேச சபை­க­ளாக அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. ஆனால் 2 இலட்­சத்­துக்கும் அதி­க­மான சனத்­தொகை உள்ள அம்­ப­க­முவ மற்றும் நுவ­ரெ­லியா ஆகி­ய­வற்­றுக்கு  தலா ஒரு உள்­ளூ­ராட்சி மன்­றங்­களே  உள்­ளன. இது போதாது. இதனை கொண்டு உரிய அபி­வி­ருத்­தியை மலை­யக மக்­க­ளிடம் கொண்டு செல்ல முடி­யாது. எனவே இது தொடர்­பாக ஜனா­தி­பதி , பிர­த­ம­ரிடம் எடுத்­து­ரைத்தோம். 

இதன்­படி ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் பிரச்­சி­னையை  ஏற்­றுக்­கொண்டு மாகாண சபை மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்­ச­ரிடம் இதற்­கான ஆலோ­ச­னையை  இரு­வரும் வழங்­கி­யுள்­ளனர். ஆகவே மலை­யக மக்­களின் பிரச்­சி­னையை ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியும் புரிந்து கொண்­டுள்­ளன. ஆகவே நுவ­ரெ­லிய மாவட்­டத்தில் பிர­தேச சபை­களை அதி­க­ரிக்க வேண்டும் என்ற  எமது கோரிக்­கை­கக்கு வெற்றி  கிட்­டி­யுள்­ளது. 

இதன்­படி நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களை அதி­க­ரிக்க அமைச்சர் பைசர் முஸ்­தபா இணங்­கி­யுள்ளார். எனவே உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் அதி­க­ரிப்­பா­னது மலை­யக மக்­க­ளுக்கு பெரும் பல­மாகும். அத்­துடன் இது ஜன­நா­ய­கத்­திற்கு கிடைத்த பாரிய வெற்­றி­யாகும். தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் முயற்­சிக்கு பாரிய வெற்றி கிடைத்­துள்­ளது. 

எனினும் இப்­பி­ரச்­சினை நீண்ட கால­மாக இருந்து வந்­தது.  ஆனால் குறித்த பிரச்­சி­னையை தீர்க்க எந்த அர­சாங்­கமும் முன்­வ­ர­வில்லை. அர­சாங்­கங்­களின் மீது குறை கூறு­வதில் அர்த்­த­மில்லை. அப்­போது இருந்த அமைச்­சர்­க­ளுக்கே இது குறித்து செய­லாற்ற முடி­யாது போனது. இது தொடர்­பாக போதிய தெளிவும் அவர்­க­ளுக்கு இருக்­க­வில்லை. எனவே நாம் தனி­நாடு கோர­வில்லை. எமக்­கான உள்­ளூ­ராட்சி மன்­றங்­களை அதி­க­ரிக்­கவே கோரினோம். அதற்கு உரிய பதில் கிடைத்­துள்­ளது. இது எமக்கு போது­மா­னது. சந்­தோஷம் என்றார். 

நுவ­ரெ­லியா மாவட்­டத்தில்  உள்­ளூ­ராட்சி மன்­றங்­களை அதி­க­ரிப்­ப­தற்கு  ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும்   இணக்கம் தெரி­வித்­துள்­ளமை  மலை­யக மக்­க­ளுக்கும்  தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணிக்கும் கிடைத்த வெற்­றி­யாகும் என்று   இங்கு கருத்து தெரி­வித்த அமைச்சர் திகாம்­பரம்  சுட்­டிக்­காட்­டினார். 

வி. இரா­தா­கி­ருஷ்ணன்

இங்கு கருத்து தெரி­வித்த  இரா­ஜாங்கு அமைச்சர்  இராதா கிருஷ்ணன், 

உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் அதி­க­ரிப்பின் கார­ண­மாக மலை­யக மக்­க­ளுக்கு உரித்­தான அபி­வி­ருத்தி திட்­டங்­களை எம்மால் மேலும் அதி­க­ரித்து கொள்ள முடியும். அத்­துடன் அதி­க­ள­வி­லான நிதியை ஒதுக்­கீடு செய்து கொள்ள முடியும். எனவே அபி­வி­ருத்­திக்­கான மலைய மக்­களின் பங்கு மேலும் அதி­க­ரிக்கும்.  உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் நட­வ­டிக்­கைகள் தொடர்பில் எனக்கு பூரண அனு­பவம் உள்­ளது. ஆகவே மலை­யக மக்­களின் பிர­தான பிரச்­சினை ஒன்றை தீர்த்­த­மைக்­காக நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மீதான ஆத­ர­வினை தொடர்ந்து வழங்­குவோம் என்றார்.

அர­விந்த குமார்

செய்­தி­யாளர் மாநாட்டில் கருத்து தெரி­வித்த  பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அர­விந்த குமார் ,

பதுளை மாவட்­டத்­திலும் நுவ­ரெ­லியா மாவட்­டத்­திலும் ஒரே அள­வி­லான சனத்­தொ­கையும் நிலப்­ப­ரப்­புமே உள்­ளன. எனினும் பது­ளையில்  சிங்­கள மக்கள் அதி­க­மாக உள்­ளனர்.  அதுவே இரு இடங்­க­ளி­லு­முள்ள  வித்­தி­யா­ச­மாகும். . எனினும் பது­ளையில் 10 உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் உள்­ளன. நுவ­ரெ­லி­யாவில் 8 மன்­றங்­களே உள்­ளன. எனவே இதுவே வித்­தி­யாசம். ஆகவே நுவ­ரெ­லிய வாழ் மக்­களின் பிரச்­சி­னைக்கு உரிய தீர்வு வழங்­கப்­பட வேண்டும் என்றார்.

பிய­சேன

இங்கு கருத்து தெரி­வித்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பிய­சேன ,

நுவ­ரெ­லிய மக்­களின் வாக்­கு­களை பெற்­றவன் என்ற வகையில் இது மலை­யக மக்­க­ளுக்கு கிடைத்த பாரிய வெற்­றி­யாகும்.இதன் மூலம் இனங்­க­ளுக்­கி­டையில் மேலும் புரிந்­து­ணர்வை ஏற்­ப­டுத்த முடியும் என்றார்.

அமைச்சர் பைசர் முஸ்தபாவுடன் சந்திப்பு

இதேவேளை நுரெலியா மாவட்டத்தில்  உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கையை   அதிகரிப்பது தொடர்பில்  நேற்று  காலை  தமிழ் முற்போக்கு கூட்டணியின்  தலைவர்கள்   உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர்  பைசர்  முஸ்தபாவை சந்தித்து  பேசியுள்ளனர்.  இந்த சந்திப்பின்போது  மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைகளை அதிகரிப்பதற்கான முன்னணியின்  யோசனைகள்  சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 

இதற்கிணங்க உள்ளூராட்சி மன்றங்களை அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுவதற்கு  நடவடிக்கை எடுக்கப்படும் என்று   அமைச்சர் பைசர் முஸ்தபா உறுதி வழங்கியுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13