மூளையில் ஏற்படும் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன சத்திர சிகிச்சை

03 Jan, 2026 | 04:06 PM
image

மூளையில் புற்று நோய் கட்டி மற்றும் புற்றுநோய் அல்லாத கட்டிகளை அகற்றுவதற்கு தற்போது அவேக் கிரியானடமி என மருத்துவ மொழியில் குறிப்பிடப்படும் விழிப்பு நிலையிலான நவீன சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

மூளையில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளுக்காக குறிப்பாக தீங்கற்ற மற்றும் தீங்கு விளைவிக்கும் கட்டிகளை அகற்றுவதற்கான சத்திர சிகிச்சையை மேற்கொள்ளும் போது வைத்திய நிபுணர்கள் தற்போது விழிப்பு நிலையிலான சத்திர சிகிச்சையை மேற்கொள்கிறார்கள்.‌

உங்களுடைய மூளைப் பகுதியில் ஏற்பட்டிருக்கும் கட்டி அல்லது வலிப்பு தாக்கங்களுக்காக மூளைப்பகுதியில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படும் போது நோயாளியின் பார்வை திறன்- இயக்கம்- பேச்சுத் திறன் - ஆகியவற்றை கட்டுப்படுத்தும் மூளையின் பகுதிகளுக்கு அருகில் இருந்தால்... இத்தகைய நவீன சத்திர சிகிச்சையின் போது நோயாளியை மயக்க நிலைக்கு ஆளாகாமல் அவர்களை விழித்திருக்க செய்கிறார்கள்.

இத்தகைய தருணங்களில் சத்திர சிகிச்சை நிபுணர்களின் குழுவில் உள்ளவர்கள் நோயாளிகளிடம் கேள்விகளை கேட்டு  பதிலளிக்கும் போது... அந்த தருணத்தில் உங்களுடைய மூளையின் செயல்பாட்டை சத்திர சிகிச்சை நிபுணர்கள் துல்லியமாக அவதானிப்பர்.  நீங்கள் அளிக்கும் பதில்கள் சத்திர சிகிச்சைக்கு அவசியமானதாக இருக்கும்.

மேலும் சத்திர சிகிச்சை நிபுணர் மூளையில் ஏற்பட்டிருக்கும் கட்டி பாதிப்பை துல்லியமாக அவதானித்து சத்திர சிகிச்சை செய்வதை உறுதிப்படுத்துகிறார். இத்தகைய நவீன சிகிச்சை நடைமுறையின் காரணமாக நோயாளியின் பார்வை -இயக்கம் மற்றும் பேச்சுத் திறன் ஆகியவை பாதிக்கப்படாமல் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதனுடைய சேதத்தின் அபாய அளவையும் குறைக்கிறது. 

வைத்தியர் ரோஹித் தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இதய செயலிழப்பை ஏற்படுத்தும் பொலிசித்தீமியா..!?

2026-02-12 14:42:46
news-image

ஒவ்வாமையினால் ஏற்படும் கண் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2026-02-11 17:03:30
news-image

கேண்டிடியாசிஸ் எனும் பாதிப்பிற்கான நவீன சிகிச்சை

2026-02-10 15:00:08
news-image

ஓட்டோஸ்கிளிரோசிஸ் எனும் கேட்கும் திறன் பாதிப்பிற்குரிய...

2026-02-09 18:19:16
news-image

சுப்பீரியர் வேனா காவா சிண்ட்ரோம் எனும்...

2026-02-07 15:10:23
news-image

நுரையீரல் பாதிப்புகளை துல்லியமாக அவதானிக்கும் நவீன...

2026-02-06 17:07:16
news-image

மன அழுத்தத்தை குறைக்கும் நவீன சிகிச்சை

2026-02-05 15:27:13
news-image

கோசிடினியா எனும் வால் எலும்பு வலி...

2026-02-04 15:21:40
news-image

குருதி உறைவு பாதிப்பை துல்லியமாக அவதானிக்கும்...

2026-02-04 04:08:54
news-image

பிளசன்டா ப்ரிவியா எனும் நஞ்சுக்கொடி பாதிப்பிற்குரிய...

2026-02-02 16:08:16
news-image

நாட்பட்ட கல்லீரல் செயலிழப்பு நோய் பாதிப்பிற்குரிய...

2026-01-31 16:16:40
news-image

சிஸ்டமிக் லூபஸ் எரிதிமடோசஸ் எனும் பாதிப்பிற்கு...

2026-01-30 17:35:52