அல்லைப்பிட்டி அலுமினியம் தொழிற்சாலை வீதியின் அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைத்தார் ரஜீவன்

03 Jan, 2026 | 01:13 PM
image

ஜனாதிபதி அனுர தலைமையிலான அரசின் 1000 கிராகிய வீதிகள் அபிவிருத்தி திட்டத்தின் ஒரு கட்டமாக இன்று யாழ்ப்பாணம் வேலணை பிரதேசத்தின் அல்லைபிப்ட்டி, அலுமினியம் தொழிற்சாலை வீதியை, காப்பெற் வீதியாக அபிவிருத்தி செய்வதற்கான பணிகள் சனிக்கிழமை (03) நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மக்களின் அவசிய தேவை கருதி தேசிய மக்கள் சக்தியின் வேலணை பிரதேச சபை உறுப்பினரான ஆனந்தராசா சதீஸ்குமாரின் திட்ட முன்மொழிவுடன், தெரிவு செய்யப்பட்ட குறித்த வீதியின் அபிவிருத்திக்கான ஆரம்ப பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன்  ஆரம்பித்து வைத்தார்.

குறித்த 1000 கிராகிய வீதிகள் அபிவிருத்தி திட்டத்தின் முதற் கட்டமாக வடக்கில் 25 வீதிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், வேலணை பிரதேசத்தில் 

30.7 மில்லியன் நிதிச் செலவில் 1.3 கிலோ மீற்றர் தூரம் கொண்ட குறித்த வீதியானது "காப்பெற்" மற்றும் கொங்கிறீற் ஆகிய இரு வகைகளிலும் குறித்த பகுதியின் நீரோட்டத்துக்கு இயைவாக நிர்மாணிக்கப்படவுள்ளது.

இன்னிலையில் அலுமினியம் தொழிற்சாலை வீதி, 50 வருடங்களின் பின், குறிப்பாக வீதி உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து நிரந்தர அபிவுருத்தியை காணாதிருந்த குறித்த வீதி இன்று அதன் எதிர்பார்ப்பை எட்டியுள்ளதாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இதனிடையே குறித்த பகுதியில் இருக்கும் மற்றொரு அவசிய வீதியான மண்டைதீவு இணைப்பு வீதியையும் அபிவிருத்தி செய்து தருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவனிடம் மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

மக்களின் கோரிக்கையின் நியாயம் கருதி குறித்த வீதிக்கான அபிவிருத்தி விரைவில் முன்னெடுக்கப்படும் என்றும் அதற்கு முன்னர் அவ்வீதியின் பாலம் ஒன்று சுமார் 60 மில்லியன் நிதியில் கட்டமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன், குறித்த பாலம் நிறைவுற்றபின் குறுத்த வீதிக்கான நிதி பெற்றுத்தரப்படும் என்றார். 

அத்துடன் ஜனாதிபதி அனுர கிராம கக்களின் நலன்களில் அதிக அக்கறை செலுத்தி வருவதால் உங்கள் எதிர்பாருக்கள் விரைவில் நிறைவேறும் என்றும் சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க அபின் மற்றும்...

2026-07-14 16:58:44
news-image

அரசியலமைப்புடன் விளையாடுவது ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயல்;...

2026-07-14 15:42:45
news-image

நீதித்துறையை ஆக்கிரமித்து எதிர்க்கட்சிகளை முடக்க அரசு...

2026-07-14 17:44:19
news-image

அரசை விமர்சித்து சரியான பாதைக்கு திருப்புவோம்;...

2026-07-14 14:22:50
news-image

204 மில்லியன் பெறுமதியான அதிநவீன ஆய்வக...

2026-07-14 14:27:28
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்துக்கு பரிந்துரைகள் அமுல்படுத்தாததே...

2026-07-14 14:35:40
news-image

இலங்கை மற்றும் தான்சானியாவின் நீரியல் வளர்ப்புத்...

2026-07-14 22:02:43
news-image

கட்டார் நாட்டின் முன்னாள் தலைவரின் மறைவுக்கு...

2026-07-15 04:08:39
news-image

விவசாயிகளுக்கு சலுகைக் கடன் வழங்க புதிய...

2026-07-14 18:25:14
news-image

ஜே.வி.பி அரசாங்கத்தின் போலித்தனம் அம்பலம் ;...

2026-07-14 18:26:52
news-image

உளவுத்துறை மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையிலேயே பிரமுகர்...

2026-07-14 18:25:38
news-image

புதிய தமிழ் - முஸ்லிம் கட்சிகளின்...

2026-07-14 18:24:09