ஜனா­தி­பதி வேட்­பாளர் கன­வி­லேயே விஜே­தாஸ ராஜபக்   ஷ செயற்­பட்டார். அத­ னா­லேயே ராஜபக் ஷ குடும்­பத்தை பாது ­காத்து வந்தார் என தேசிய ஐக்கிய முன்­ ன­ணியின் தலைவர் அஸாத் சாலி தெரி­ வித்தார்.

62 லட்சம் மக்கள் அமைப்பு நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

அர­சாங்கம் அதி­கா­ரத்­துக்கு வந்து இரண்­டு­ வ­ரு­டங்கள் ஆகியும் மக்­க­ளுக்கு அளித்த வாக்­கு­று­தி­களில் அதி­க­மா­னவை இன்னும் நிறை­வேற்­றப்­ப­டாமல் இருக்­கின்­றன. 

இதனால் இந்த அர­சாங்­கத்தை அதி­கா­ரத்­துக்கு கொண்­டு­வர பாடு­பட்ட மக்கள் அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள் அர­சாங்கம் மீது விரக்­தி­ய­டைந்­தி­ருந்­தனர். அதனால் தொடர்ந்தும் அர­சாங்­கத்தின் போக்கை பார்த்­துக்­கொண்­டி­ருக்­காமல் மக்­க­ளுக்கு அளித்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற அழுத்தம் கொடுக்கும் சத்­தி­யாக்­கி­ரக போராட்­டத்தை கடந்த வாரம் ஆரம்­பித்தோம். இதன் கார­ண­மாக அர­சாங்­கத்தின் மீது விரக்­தி­ய­டைந்­தி­ருந்­த­வர்கள் மீண்டும் ஒன்­று­பட்­டுள்­ளனர்.

நல்­லாட்சி அர­சாங்கம் அதி­கா­ரத்­துக்கு வந்தால் ஆரம்­ப­மாக ஊழல் மோசடிக் காரர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­ப­தாக தெரி­வித்­தி­ருந்­தது. ஆனால் 2 வரு­டங்கள் கடந்தும் எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ட­வில்லை. ராஜபக் ஷ குடும்பத்­ துக்கு எதி­ரான 82 குற்­றச்­சாட்டு விசா­ர­ ணைகள் முடி­வ­டைந் தும் சட்­டமா அதிபர் திணைக்களம் அதற்­ கெ­தி­ராக எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­காமல் இருக்கின்றது. அதற்கு நீதி அமைச்­சரே தடை­யாக இருந்­ துள்ளார்.

அத்­துடன் எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் வேட்­பா­ள­ராக போட்­டி­யிடும் நோக்­கத்­தி­லேயே விஜே­தாஸ ராஜபக் ஷ, ராஜபக் ஷ குடும்­பத்­துக்கு எதி­ரான வழ க்கு விசா­ர­ணை­களை திட்­ட­மிட்டு பிற்­ப­டுத்தி வந்­துள்ளார். 

இதன் மூலம் மஹிந்த ராஜ­பக் ஷவின் ஆத­ரவை பெற்­றுக்­கொள்­வதே அவரின் நோக்­க­மாகும். அத்­துடன் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை ஒழிப்­ப­தாக ஜனா­தி­பதி வாக்­கு­றுதி அளித்­துள்ளார். ஆனால் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே போட்­டி­யி­டுவார் என அந்த கட்­சியின் ஒரு­சிலர் தெரி­வித்து வரு­கின்­றனர்.

அர­சாங்கம் மக்­க­ளுக்கு அளித்த வாக்­ கு­று­தியின் பிரகாரம் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாம லாக்க வேண்டும். அவ்வாறில்லாமல் பாராளுமன்றத்துக்கு சில அதிகாரங்களை வழங்குவதன் மூலம் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்றார்.