வித்­தியா படு­கொலை வழக்கின் பிர­தான சந்­தேக நப­ரான சுவிஸ்குமாரை மின் கம்­பத்தில் கட்டி வைத்து கிராம மக்கள் தாக்­கியபோது அவரை கைது செய்­யு­மாறு புங்­கு­டு­தீவு பொலி­ஸா­ரி­டத்தில்  சிறுவர் விவ­கார ராஜாங்க அமைச்சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வரன் கோரி­யுள்ளார்.

அத்­துடன் வித்­தி­யாவின் படு­கொலை இடம்­பெற்ற பின்னர், பொது மக்கள் வழங்­கிய தக­வல்­க­ளையும் அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் பொலி­ஸா­ருக்கு அப்­போதே வழங்­கி­யுள்ளார் என்று குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வினர் ஊர்­கா­வற்­றுறை  நீதி­மன்­றுக்கு அறி­வித்­துள்­ளனர்.

அத்­துடன் சுவிஸ் குமார் விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ளதை இரா­ஜாங்க அமைச்சர் அடுத்த நாள் வேலணை  பிர­தேச சபையில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றின் போதே தெரிந்­துக்­கொண்­டுள்ளார் என்றும் புல­னாய்வு பிரி­வினர் மன்­றுக்கு அறி­வித்­துள்­ளனர். 

சுவிஸ் குமார் தப்­பித்த விவ­காரம் தொடர்பில் இடம்­பெறும் விசா­ர­ணைகள்  குறித்து குற்றப் புல­னாய்வுப் பிரிவு ஊர்­கா­வற்­றுறை  நீதிவான் மொஹம்மட் ரியா­ழிடம் வழங்­கி­யுள்ள மேல­திக விசா­ரணை அறிக்கை ஊடா­கவே இந்த விட­யங்கள் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளன.

யாழ்ப்­பாணம் நீதிவான் நீதி­மன்ற அதி­கா­ரத்­துக்கு உட்­பட்ட பகு­தியில் வைத்து  சுவிஸ் குமார் தப்பிச் சென்­றுள்­ளதால் ஊர்­கா­வற்­றுறை  நீதி­மன்­றத்தில் வழக்­கினை தொடர்ந்து நடத்த முடி­யுமா என்­பது குறித்து அறி­விக்­கு­மாறு   நீதிவான் மொஹமட் றியால்  இதற்கு முன்னர் சட்­டம அதி­ப­ருக்கு உத்­த­ர­விட்­டி­ருந்தார்..

அதற்­க­மைய சந்­தேக நப­ரான சுவிஸ் குமார் வழக்­கினை ஊர்­கா­வற்­றுறை  நீதி­மன்­றத்தில் தொடர்ந்து நடத்த முடியும் என சட்­டமா அதிபர் திணைக்­களம் நேற்று முன்­தினம் 22 ஆம் திகதி அறி­வித்­துள்­ளது.

வித்­தியா என்ற மாணவி ஊர்­கா­வற்­றுறை  நீதி­மன்­றத்­திற்கு அதி­கா­ர­முள்ள பகு­தி­யி­லேயே கொலை செய்­யப்­பட்­டுள்ளார் என்­ப­தாலும், உப பொலிஸ் பரி­சோ­தகர் ஸ்ரீ கஜன் சுவிஸ் குமாரை புங்­குடு தீவில் வைத்தே கைது செய்­துள்­ள­தாலும் ஊர்­கா­வற்­றுறை நீதி­மன்­றத்தில் வழக்­கினை தொடர்ந்து நடத்­து­வ­தற்கு எந்த தடங்­களும் இருக்­காது என சட்­டமா அதிபர் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது.

அத்­துடன் வழக்கின் சந்­தேக நப­ரான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஏ.ஜய­சிங்க மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த நிலையில்  அவ­ருக்கு பிணை வழங்­கு­மாறு அவரின் சட்­டத்­த­ர­ணிகள் கோரி­யி­ருந்­தார்கள். 

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஏ.ஜய­சிங்க சேவையில் இருந்த போது வித்­தியா வழக்கு தடை­யின்றி முன்­னெ­டுக்­கப்­பட்டு சென்­ற­தா­கவும் சட்­டத்­த­ர­ணிகள்  மன்றில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர். மேலும் இவர் விளக்­க­ம­றி­யலில் இருக்­கின்­ற­மையால் பொலிஸார் அச்­ச­மின்றி வாக்­கு­மூலம் அளிப்­பார்கள்  என்றும் கடந்த நாட்­களில் 14 வாக்­கு­மூ­லங்கள் பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தா­கவும் சட்­டமா அதிபர் திணைக்­களம் சார்­பாக மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்த அரச சட்­டத்­த­ரணி எஸ்.நிஷாந்தன் மற்றும் குற்­ற­பு­ல­னாய்வு பிரிவின் கூட்டு கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணை பிரிவின் பொறுப்­ப­தி­காரி நிஷாந்த டி சில்வா ஆகியோர் மன்றில் அறி­வித்­துள்­ளனர். 

சந்­தேக நப­ரான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதி­பரின் சட்­டத்­த­ர­ணிகள் விடுத்த கோரிக்­கையின் பொருட்டு நீதி மன்ற உத்­த­ரவின் பேரில் இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ர­னி­டத்தில் வாக்­கு­மூலம் பெற்­றுக்­கொள்­ளப்­பட்­ட­தா­கவும் இவர்கள் மன்றில் அறி­வித்தே அவ­ரது வாக்கு மூலம் அடங்­கிய மேல­திக அறிக்­கையை மன்றில் சமர்­பித்­தனர்.

அதில் வித்­தியா கொலையின் பின்னர்  பிர­தேச மக்கள் வழங்­கிய தக­வல்­க­ளுக்கு அமைய  சந்­தேக நபர்கள் பலர் தொடர்­பி­லான தக­வல்­களை  இரா­ஜாங்க அமைச்சர் ஊர்­கா­வற்­றுறை பொலி­ஸா­ருக்கு வழங்கியுள்ளதாகவும்,  அதன் பின்னர் சுவிஸ் குமார் மின் கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டு கிராம மக்களினால் தாக்கப்பட்ட வேளை  அவரை பொலிஸாரிடத்தில் ஒப்படைக்குமாறு மக்களையும் அறிவுறுத்தி பொலிஸாருக்கும் அமைச்சர் அறிவித்துள்ளார் என்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் மன்றுக்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.