அம்பத்தளையிலிருந்து தெஹிவளை வரையிலான பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு காரணமாக கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கு இன்று சனிக்கிழமை (03) நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, மொரட்டுவை, ராவதவத்த, சொய்சா-புர, இரத்மலானை, கல்கிஸ்ஸை, தெஹிவளை, வெள்ளவத்தை, பாமன்கடை, முல்லேரியா மற்றும் கொலன்னாவை ஆகிய பகுதிகளுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பத்தரமுல்லை பகுதிக்கு குறைந்த அழுத்தத்தின் கீழ் நீர் விநியோகிக்கப்படவுள்ளது.
எவ்வாறாயினும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை இன்று சனிக்கிழமை (03) நள்ளிரவுக்கு முன்னர் குழாயை சரிசெய்து நீர் விநியோகத்தை வழங்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM