இலஞ்சம் வாங்கிய இரு வனவள பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு உத்தியோகத்தர்களிடம் கையும் களவுமாக பிடிபட்டனர்.

இச் சம்பவம் வவுனியாவில் வவுனியாவில் நேற்று மதியம் 11 மணியளவில்   இடம்பெற்றுள்ளது.

வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள வனவள பாதுகாப்பு திணைக்களத்தில் பணியாற்றும் இரு உத்தியோகத்தர்கள் நேற்றுக் காலை  11 மணியளவில் அலுவலகத்தில் வைத்து இலஞ்சம் வாங்கிய வேளை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு உத்தியோகத்தர்களினால் கைது செய்யப்பட்டனர்.

பொதுமக்களினால் வழங்கப்பட்ட ரகசிய முறைப்பாட்டிற்கு அமைவாகவே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு உத்தியோகத்தர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட இரு உத்தியோகத்தர்களும் நேற்று மாலை வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இருவரையும்  தலா  14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு   நீதிவான் உத்தரவிட்டார்.