லயன் மனோ பவுண்டேசனினால் பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பை, கொப்பிகள் வழங்கி வைப்பு

02 Jan, 2026 | 04:55 PM
image

லயன் மனோ பவுண்டேசனினால் (Lion Mano Foundation) கொட்டாஞ்சேனையிலுள்ள பரமானந்த விகாரையில் கடந்த மாதம் புதன்கிழமை (31) 60 பாடசாலை மாணவர்களுக்கு தேவையான பாடசாலை பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.  

பாடசாலை புத்தகப் பை, அப்பியாசக் கொப்பிகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் ஆகியன இவ்வாறு மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

லயன் மனோ பவுண்டேசனின் ஸ்தாபகர் சிதம்பரம் மனோகரனின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மாணவர்களுக்கான பொருட்களை வழங்குவதற்கு தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த தசநாயக்க, சிவானந்தன் ஆகியோர் நிதி உதவிகளை வழங்கியுள்ளனர்.

எதிர்காலத்தில் மேலும் பல உதவிகளை லயன் மனோ பவுண்டேசனினால் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக கொழும்பில் வசிக்கும் வசதி குறைந்த 60 மாணவர்களுக்கு பாடசாலை பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதன் ஸ்தாபகரும் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான சிதம்பரம் மனோகரன் தெரிவித்தார். 

இந்நிகழ்வில் மாணவர்களுக்கான பாடசாலை பொருட்களுக்கு நிதியுதவிகளை வழங்கிய தசநாயக்க, சிவானந்தன் மற்றும் கொட்டாஞ்சேனையிலுள்ள பரமானந்த விகாரையின் விகாராதிபதி உள்ளிட்ட சகல இன மாணவர்களும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

"நூலைப்படி" : நாட்டிய நூல்களின் அறிமுக...

2026-01-19 23:27:21
news-image

கலாமித்ரா விருது விழா : பாடல்...

2026-01-19 21:37:23
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் அறநெறிப்...

2026-01-19 16:57:55
news-image

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர்,  தென்னிந்திய...

2026-01-18 16:30:25
news-image

கண்டியில் கலாஞ்சலி நாட்டிய நிகழ்வு ஏற்பாடு

2026-01-16 18:37:47
news-image

நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் பொங்கல் விழா...

2026-01-16 11:31:03
news-image

செல்வி தானியா சுரேந்திரனின் பரதநாட்டிய அரங்கேற்றம்

2026-01-15 18:30:10
news-image

வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2026-01-15 21:41:08
news-image

கொழும்பு - காக்கைதீவில் மாபெரும் பொங்கல்...

2026-01-15 17:58:43
news-image

“Lanka Ride” துவிச்சக்கரவண்டிப் பேரணி நாளை...

2026-01-15 11:43:05
news-image

'MEANDERING MOODS' ஓவியக் கண்காட்சி

2026-01-14 15:34:00
news-image

சவூதி அரேபியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இலங்கையில்...

2026-01-13 17:01:00