பிறந்த குழந்தை முதல் பதினெட்டு வயது வரையிலான சிறார்களுக்கு ஏற்படும் குருதி தொடர்பான குறைபாடு பாதிப்பிற்கு தற்போது பீடியாற்றிக் ஹெமாட்டாலஜி எனும் புதிய பிரிவு தொடங்கப்பட்டு, அதனூடாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் சிவப்பணுக்கள் -வெள்ளை அணுக்கள்- தட்டணுக்கள் -ஆகிய குருதி தொடர்பான பாதிப்புகளை துல்லியமாக அவதானித்து, அதில் ஏற்படும் குறைபாடுகளையும்... சம சீரற்ற தன்மையையும் சீரமைத்து அவர்களின் குருதி ஓட்டத்தை இயல்பானதாக மாற்றுவதற்காக இயங்கும் பிரத்யேக பிரிவுதான் பீடியாற்றிக் ஹெமடாலஜி.
பெரும்பாலும் ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக குழந்தைகளுக்கு ரத்த சோகை பாதிப்பு ஏற்படுகிறது. ஒரு குழந்தை மூன்று கிலோ எடையுடன் பிறந்து, ஓராண்டிற்குள் பத்து கிலோ எடை வரை அதனுடைய உடல் எடையும், வளர்ச்சியும் சீராக இருந்திட வேண்டும்.
இத்தகைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் ஊட்டச்சத்துகளின் தேவை - இயல்பான அளவைவிட கூடுதலாக இருக்கும். பல பிள்ளைகள் போதுமான அளவிற்கு ஊட்டச்சத்து கிடைக்காததன் காரணமாக அனீமியா எனப்படும் ரத்த சோகை பாதிப்பிற்கு முகம் கொடுக்கிறார்கள்.
எம்முடைய பெற்றோர்கள் அவர்களுடைய பிள்ளைகளுக்கு பிறந்தது முதல் ஓராண்டு வரை தாய்ப்பாலை புகட்டுகிறார்கள். அதன் பிறகு பசும்பாலையோ, பால்மா பொருட்களையோ வழங்குகிறார்கள். ஓராண்டிற்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு நாளாந்தம் 500 மி. லீ அளவுக்கு உட்பட்டு தான் பசும்பால் மற்றும் பால்மா பொருட்களை உணவாக வழங்க வேண்டும்.
இதைக் கடந்து குழந்தைகளுக்கு வழங்கினால்... அதுவே அவர்களுடைய ஊட்டசத்து குறைபாட்டிற்கு காரணமாகிவிடும். இதன் காரணமாகவும் அவர்களுடைய பிள்ளைகள் ரத்த சோகை பாதிப்பிற்கு ஆளாக நேரிடும்.
இத்தகைய தருணத்தில் வைத்தியர்கள் அவர்களுக்கு குருதி பரிசோதனையை மேற்கொண்டு, பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்து, பிரத்யேக மருந்தியல் சிகிச்சை மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவு முறை குறித்து பெற்றோர்களுக்கு எடுத்துரைத்து இத்தகைய பாதிப்பிற்கு முழுமையான நிவாரணத்தை வழங்குகிறார்கள்.
எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளுக்கும், குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கும் ரத்த சோகை பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகம். ஏனெனில் ஒரு குழந்தை அவர்களுடைய தாயின் வயிற்றில் சிசுவாக இருக்கும் போது... கடைசி மூன்று மாதத்தில் தான் நஞ்சுக்கொடி மூலமாக இரும்புச்சத்து குழந்தைகளுக்கு கிடைக்கிறது.
இதில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அத்தகைய பிள்ளை பிறந்த தருணத்திலிருந்து ரத்தசோகை பாதிப்பிற்கு ஆளாகும். இதுபோன்ற பிள்ளைகளுக்கு வைத்தியர்கள் பிறந்தது முதல் ஓராண்டு வரை தொடர்ச்சியாக இரும்பு சத்து அடங்கிய பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கிறார்கள்.
வைத்தியர் ஜனனி தொகுப்பு அனுஷா.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM