டெங்கினால் பல்கலைக்கழக மாணவர்கள் எவரும் இதுவரை அனுமதிக்கப்படவில்லை  : யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர்

Published By: Priyatharshan

23 Aug, 2017 | 05:38 PM
image

டெங்கு நோய் தொடர்பில்இதுவரை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் எவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லையென யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரி.சத்தியமூர்த்தி வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

டெங்குத் தொற்றால் பல்கலைக்கழக மாணவனொருவன் இறந்ததைதையடுத்து யாழ்.பல்கலைக்கழத்தின் விஞ்ஞான பீடம் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக செய்திகள் வெளியானதையடுத்து இது தொடர்பில் நாம் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரி.சத்தியமூர்த்தியிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

டெங்கு நோய் தொடர்பில் இதுவரை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் எவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை.

விஜயரட்ணம் விந்துசன் என்ற இளைஞன் இருதய அழற்சி நோயால் உயிரிழந்துள்ளதாகவும் இருப்பினும் அவரது இறப்பபுத் தொடர்பான மேலதிக பரிசோதனைக்காக அரவரது உடலில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த 2014 ஆம் ஆண்டு 1039 பேர் டெங்கு நோய்த்தொற்றால் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் கடந்த 2015 1309 பேர் டெங்கு நோய்த்தொற்றால் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் கடந்த 2016  ஆம் ஆண்டு 670 பேர் டெங்கு நோய்த்தொற்றால் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் இவ்வாண்டு ஆரம்பம் முதல் 21 ஆம் திகதி 8 ஆம் மாதம் வரை 1702 பேர் டெங்கு நோய்த்தொற்றால் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் யாழ் போதனா வைத்தியசாலையில் புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41