விஷால் நடிப்பில் தயாராகி வரும் கதகளி பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. kathakali

நடிகர் சங்க தேர்தலில் பிசியாக இருந்ததால் பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நடித்து வந்த கதகளி படத்தின் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது. தேர்தல் முடிந்து விஷால் வெற்றி பெற்ற பின்னர் மீண்டும் கதகளி படத்தின் படபிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று முடிவடைந்திருக்கிறது.  

இதனையடுத்து இப்படத்தை எதிர்வரும் பொங்கல் அன்று வெளியிட விஷால் தீர்மானித்திருக்கிறார். அதற்கமைய இயக்குநர் பாண்டிராஜும், நாயகி கேதரீன் தெரசாவும் நன்கு ஒத்துழைப்பு கொடுத்து படத்தை முடித்திருக்கிறார்கள். இதுவும் ஒரு திரில்லர் கம் எக்சன் படம் என்கிறார் விஷால்.

பொங்கலுக்கு (கத)களி கிண்டும் விஷாலுக்கு வெற்றி கிடைத்தால் போதும் என்கிறார்கள் அவரது இரசிகர்கள்.