தரமற்ற மருந்துகளால் நோயாளர்கள் உயிரிழக்கும் அபாயம் நீடிக்கிறது - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விசனம்

01 Jan, 2026 | 04:51 PM
image

(செ. சுபதர்ஷனி)

தரமற்ற மருந்துகளால் நோயாளர்கள் உயிரிழந்துள்ளமையால் வைத்தியசாலைக் கட்டமைப்பில் பணியாற்றும் வைத்தியர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். நோயாளர்களுக்கான மருந்துகளைப் பரிந்துரைக்கும் போது அதன் தரம் தொடர்பில் இருமுறை சிந்திக்க வேண்டியுள்ளது. தரமற்ற மருந்துகளால் நோயாளர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்க உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே விசனம் வெளியிட்டுள்ளார்.

சுகாதாரத் துறையில் எழுந்துள்ள நெருக்கடிகள் தொடர்பில் புதன்கிழமை (31) அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

வைத்தியர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

இந்த நாட்டின் சுகாதாரத் துறை தற்சமயம் பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது. குறிப்பாக தரமற்ற மருந்துக் கொள்வனவு மற்றும் அவ்வாறான மருந்துகளால் நோயாளர்கள் உயிரிழந்துள்ளமையால் வைத்தியசாலைக் கட்டமைப்பில் பணியாற்றும் வைத்தியர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். நோயாளர்களுக்கான மருந்துகளைப் பரிந்துரைக்கும் போது அதன் தரம் தொடர்பில் இருமுறை சிந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தரமற்ற மருந்துகளால் நோயாளர்களின் உயிருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் மருந்துகளின் தரம் தொடர்பான கருத்துக்களை அரச தரப்பு தவிர்த்து வருவதுடன், பொறுப்புக் கூறலிலிருந்தும் விலகியுள்ளது. நாட்டிலிருந்து பெருமளவான வைத்தியர்கள் வெளியேறியுள்ள நிலையில் வைத்தியசாலைகளிலும் பாரியதொரு வெற்றிடம் உருவாகியுள்ள போதும் வைத்தியர்களுக்கான நியமனங்களை வழங்குவதிலும் காலதாமதத்தை ஏற்படுத்தி வருகின்றனர். வைத்தியர் பற்றாக்குறை உள்ள போதும் சகல வைத்தியசாலைகளிலும் நோயாளிகளைக் கருத்தில் கொண்டு சிகிச்சை சேவைகள் வழங்கப்படுகின்றன.

இந்த நெருக்கடிகளுக்குத் தீர்வாக வைத்தியர்களை நாட்டில் தக்கவைத்துக் கொள்ள 'இலங்கை விசேட வைத்திய சேவை' என்ற புதிய கட்டமைப்பை உருவாக்குமாறு நாம் முன்வைத்த யோசனையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. இது தொடர்பான கொடுப்பனவுகள் மற்றும் வசதிகள் குறித்து ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சருடன் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன. எனினும் செயற்பாட்டு ரீதியான எந்த முன்னேற்றங்களையும் நாம் காணவில்லை.

எதிர்வரும் 5 ஆம் திகதி திறைசேரிச் செயலாளருடன் தீர்மானமிக்க பேச்சுவார்த்தை இடம்பெற உள்ளது. இதன்போது எமக்குத் தீர்வு வழங்கப்படாது விடின் அரசாங்கம் எம்மை ஏமாற்றி வருகிறது என்ற நிலைப்பாடு மாத்திரமே எஞ்சும். கடந்த காலங்களில் ஏற்பட்ட சிக்கல்களின் போது, தொழிற்சங்க நடவடிக்கைகள் மூலம் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டது. 

ஆனால் தற்போதைய அரசாங்கத்திற்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கும் நோக்கில் நாம் தற்காலிகமாக அந்த நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளோம். எவ்வாறாயினும் அரசாங்கம் எம்மை ஏமாற்றவோ அல்லது இணங்கிய விடயங்களிலிருந்து விலகிச் செல்லவோ முயற்சிக்குமானால் அது அரசாங்கம் செய்யும் பாரிய தவறாக அமையும்.

சுகாதார சேவை சீரழிவதையோ அல்லது இந்தத் துறை முறிவடைவதையோ நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. சுகாதார சேவையைப் பாதுகாக்கத் தேவையான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தயங்கப்போவதில்லை. எனவே ஒரு அரசாங்கமாகவும் சுகாதார அமைச்சராகவும் பொறுப்புடன் செயற்படுமாறு வலியுறுத்துகின்றோம் என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளரின் நடவடிக்கை குறித்து...

2026-02-11 17:20:23
news-image

தேர்ந்தெடுக்கப்பட்ட நீதி மற்றும் அரசியல் உள்நோக்கம்...

2026-02-11 19:01:22
news-image

இந்த ஆண்டுக்குள் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை...

2026-02-11 15:22:48
news-image

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என உறுதியளித்தபோதிலும்,...

2026-02-11 18:46:10
news-image

மாகாணசபை தேர்தல் நடத்த அரசு தயக்கம்...

2026-02-11 17:28:08
news-image

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் :...

2026-02-11 18:43:13
news-image

சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த எந்த நாடும்...

2026-02-11 21:24:46
news-image

தட்டுப்பாடின்றி மருந்துகளை வழங்க வைத்தியசாலையில் மருந்துகள்...

2026-02-11 17:04:09
news-image

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை: 4...

2026-02-11 19:26:14
news-image

2025 ஆம் ஆண்டில் சுமார் 2,355...

2026-02-11 17:01:17
news-image

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி : தம்பதிகள்...

2026-02-11 16:15:32
news-image

ஐரோப்பிய ஒன்றிய பிரமுகர்களை சந்தித்த சாணக்கியன்,...

2026-02-11 18:08:18