இன்றைய சூழலிலும் ஒரு மில்லியன் மக்களில் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ அரிதான பாதிப்புகள் ஏற்படுவதுண்டு. இந்த பட்டியலில் மருத்துவ மொழியில் ஈசினோஃபிலிக் கிரானுலோமடோசிஸ் வித் பொலி ஒஞ்சியைடீஸ் எனும் அரிய பாதிப்பிற்குரிய நிவாரண சிகிச்சை வழங்கப்படுவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
நாட்பட்ட ஓஸ்துமா, மூக்கடைப்பு, ஒவ்வாமை, சைனஸ் தொற்றுகள், மூக்கில் சதை வளர்ச்சி ஆகிய அறிகுறிகள் இருந்தால் மேலே விவரிக்கப்பட்ட ஈசினோஃபிலிக் கிரானுலோமடோசிஸ் வித் பொலி ஒஞ்சியைடீஸ் எனும் பாதிப்புகள் ஏற்படக்கூடும். இவற்றை உரிய தருணத்தில் கண்டறிந்து நிவாரண சிகிச்சையை முழுமையாகவும், முறையாகவும் பெறவில்லை என்றால்.. தோல் தடிப்பு, வயிற்று வலி, இரத்தப்போக்கு, கை கால்களில் உணர்வின்மை, கூச்ச உணர்வு ஆகிய பாதிப்புகள் ஏற்படக்கூடும். அத்துடன் நரம்பு சேதம்- இதய பாதிப்பு- சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு, உயிருக்கு அச்சுறுத்தலை உண்டாக்க கூடும்.
இத்தகைய பாதிப்பின் அறிகுறி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் மாறுபடும். சிலருக்கு அறிகுறிகள் கடுமையாக ஏற்படலாம். ஒவ்வாமை இதன் முதன்மையான அறிகுறியாகும். வேறு சிலருக்கு பசியின்மை, உடல் எடை குறைவு, மூட்டு மற்றும் தசை வலி, சோர்வு, தோல் தடிப்பு, புண், காது கேளாமை போன்ற அறிகுறிகளையும் ஏற்படுத்தும்.
இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டவுடன் வைத்தியர்களை சந்தித்தால்... வைத்தியர்கள் குருதி பரிசோதனை , எக்ஸ்ரே , எம் ஆர் ஐ ஸ்கேன் பரிசோதனை, திசு பரிசோதனை ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைப்பார்கள். இதனைத் தொடர்ந்து பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்து எம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தும் மற்றும் சமநிலைப்படுத்தும் வகையினதான பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகளை வழங்குவர் . அத்துடன் வாழ்க்கை நடைமுறையில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய மாற்றங்களை பற்றியும் பரிந்துரைப்பார்கள்.
வைத்தியர் சண்முகானந்தம்
தொகுப்பு அனுஷா.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM