(என்.வீ.ஏ.)
எல்ஜீ அபான்ஸ் நிறுவனத்தின் குறியீடு சிறப்பு தூதுவராக இலங்கையின் நட்சத்திர ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸன்க நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலில் புதன்கிழமை (31) காலை நடைபெற்ற வைபவத்தின்போதே எல்ஜீ அபான்ஸ் நிறுவனத்தின் குறியீடு சிறப்புத் தூதுவராக பெத்தும் நிஸ்ஸன்க நியமிக்கப்பட்டார்.
, டெஸ்ட், ஒருநாள் மற்றும் ரி20 ஆகிய மூவகை கிரிக்கெட் போட்டிகளிலும் தொடர்ச்சியாக பிரகாசிக்கும் ஒரு சிறந்த துடுப்பாட்ட வீரரை நுகர்வோர் மின்னணு மற்றும் வீட்டு உபகரண குறியீடான எல்ஜி-அபான்ஸ் நிறுவனத்துடன் சேர்ப்பதன் மூலம் லைஃப்ஸ் குட் என்ற எல்ஜி குறியீடு கருப்பொருள் நிலைநிறுத்தப்படும் என்று எல்ஜி தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி சத்துர ஜயவர்தன தெரிவித்தார்.
இந்த வைபவத்தில் பெத்தும் நிஸ்ஸன்கவுக்கு ரீ ஷேர்ட் ஒன்றை வழங்கி தமது குறியீடு சிறப்பு தூதுவராக எல்ஜி தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி சத்துர ஜயவர்தன வரவேற்றார்.
உற்பத்தி முகாமையாளர் மஞ்சுள ஜயசிங்க, அபான்ஸ் பொது முகாமையாளர் ருவன் குணசேகர மற்றும் சிரேஷ்ட சந்தைப்படுத்தல் நிர்வாகி எனுர பாலசூரிய ஆகியோரும் இந்த வைவத்தில் கலந்துகொண்டனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM