யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடம் டெங்கு தொற்று காரணமாக எதிர்வரும் 4 ஆம் திகதி வரை மூடப்படும் என யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவித்துள்ளார்.

விஞ்ஞான பீட மாணவர்களாலும், பெற்றோர்களாலும் விடுக்கப்பட்ட கோரிக்கையை கருத்தில் கொண்டே யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விஞ்ஞான பீடம் மூடப்படும் என அறிவித்துள்ளார்.