இலங்கையை மீளக்கட்டியெழுப்பல் நிதியத்துக்கு சிவில் சமூகப்பிரதிநிதிகளை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை

Published By: Vishnu

31 Dec, 2025 | 09:58 PM
image

(நா.தனுஜா)

இலங்கையின் அண்மைய வரலாற்றில் பதிவான மிகமோசமான இயற்கைப் பேரழிவுகளில் ஒன்றான 'தித்வா' சூறாவளியினால் ஏற்பட்ட பெரும் சேதத்தைத் தொடர்ந்து, நாட்டை மீளக்கட்டியெழுப்புவதைப் பிரதான நோக்காகக்கொண்டு நிறுவப்பட்ட 'இலங்கையை மீளக்கட்டியெழுப்பல்' நிதியத்துக்கு சிவில் சமூகப்பிரதிநிதிகள் சிலரை நியமிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக சிவில் சமூக வட்டாரங்கள் மூலம் அறியமுடிகின்றது.

மேற்கூறப்பட்ட நோக்கத்துக்காக அரச மற்றும் தனியார் துறைகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கி, ஜனாதிபதி செயலகத்தின்கீழ் ஒரு சட்டபூர்வ நிதியமாக இயங்கும் வகையில் ஸ்தாபிக்கப்பட்ட 'இலங்கையை மீளக்கட்டியெழுப்பல்' நிதியத்தின் தலைவராக தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதியமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோவும், அதன் ஒருங்கிணைப்பாளராக ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ஜி.எம்.ஆர்.டி.அபொன்சுவும் செயற்பட்டுவருகின்றனர்.

அதேபோன்று அந்நிதியத்தின் உறுப்பினர்களாக வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியும் மேல்மாகாண ஆளுநருமான ஹனீஃப் யூஸுப், நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் சுகீஸ்வர குணவர்தன, ஹேலிஸ் குழுமத்தின் தலைவர் மொஹான் பண்டிதகே, ஜோன் கீல்ஸ் நிறுவனத் தலைவர் கிரிஷான் பாலேந்திரன், எட்கன் ஸ்பென்ஸ் உபதலைவர் மற்றும் முகாமைத்துவப்பணிப்பாளர் கலாநிதி பராக்கிரம திஸாநாயக்க, பிரண்டெக்ஸ் குழுமத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி அஷ்ரஃப் ஒமர், எல்.ஓ.எல்.சி நிறுவனத்தின் நிறைவேற்றுத்தலைவர் இஷார நாணயக்கார ஆகியோர் இயங்கிவருகின்றனர்.

இருப்பினும் கடந்த டிசம்பர் மாதத் தொடக்கத்தில் இந்நிதியம் ஸ்தாபிக்கப்பட்ட வேளையில் அதில் பெருவணிகர்களே உள்வாங்கப்பட்டிருப்பது குறித்தும், பெண் பிரதிநிதிகள் நியமிக்கப்படாமை குறித்தும் பல்வேறு தரப்பினரும் கரிசனைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.  

இவ்வாறானதொரு பின்னணியில் இந்நிதியத்துக்கு சிவில் சமூகப்பிரதிநிதிகள் சிலரை நியமிப்பது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாகவும், அதனை முன்னிறுத்தி சிவில் செயற்பாட்டாளர்கள் சிலருடன் கலந்துரையாடி வருவதாகவும் சிவில் சமூக வட்டாரங்கள் மூலம் அறியமுடிகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

2026-02-13 08:42:59
news-image

விபத்தில் சிக்கி 17 வயது இளைஞன்...

2026-02-13 08:24:52
news-image

கிழக்கு, மத்திய, ஊவா உள்ளிட்ட பல...

2026-02-13 06:24:32
news-image

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவு...

2026-02-12 16:29:36
news-image

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரச்சினைக்கு...

2026-02-12 20:25:41
news-image

கல்விச் சபையை நிறுவுவ நிபுணர் குழு...

2026-02-12 16:50:56
news-image

தித்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான கொடுப்பனவுகளுக்காக...

2026-02-12 16:31:16
news-image

இலங்கை கோரினால் ஆதரவு வழங்க தயார்...

2026-02-12 20:25:22
news-image

வாக்குறுதிகளை நிறைவேற்றியது அரசாங்கம் - கொழும்பு...

2026-02-12 20:24:48
news-image

ஆடை ஏற்றுமதியில் பிராந்தியத்திலேயே மிக அதிக...

2026-02-12 20:24:29
news-image

சிறுவர் உழைப்பை ஒழிக்க கல்வி மறுசீரமைப்பே...

2026-02-12 16:37:44
news-image

அடிப்படை உரிமைகளைப் பணயம் வைத்து தேசிய...

2026-02-12 20:24:09