இன்றைய திகதியில் இளைய தலைமுறையினர் பலரும் கணினி முன் அமர்ந்து மணிக்கணக்கில் பணியாற்றுகிறார்கள். அதனால் இவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. இந்நிலையில் ஒரு சிலருக்கு தாடைப்பகுதிகளில் திடீரென்று வலி உருவாகும். ஒரு சிலருக்கு தாடைப் பகுதியில் ஏற்பட்ட வலி கன்னம், காது, கழுத்து வரை கூட பரவும். இவ்வகையான வலிக்கு Temporomandibular Joint Disorder என குறிப்பிடப்படுகிறது.

இந்த வலி 30 முதல் 40 வயதிற்குற்பட்ட ஆண் பெண் என இருபாலாருக்கும் பத்தில் ஐந்து பேருக்கு ஏற்படுகிறது என்கிறது ஆய்வு. மன அழுத்தம் காரணமாக பலரும் தங்களின் தாடைப்பகுதியில் அதிகளவு அழுத்தம் கொடுத்து துடைப்பதாலும், பற்களை நறநறவென கடித்துக் கொள்வதாலும் அப்பகுதியில் மென்மையாக உள்ள சாக்கெட் ஜோயிண்ட் பகுதி பாதிக்கப்படுகிறது. இதனால் தாடைப்பகுதியில் உள்ள தசைகள் இறுக்கமடைகின்றன. இதனால் தான் அங்கு வலி உருவாகிறது. ஒரு சிலருக்கு இதன் காரணமாக தலைவலி, சோர்வு, அடிக்கடி கொட்டாவி விடுவது போன்றவைகள் ஏற்படும்.

மன அழுத்தத்தை குறைப்பதற்கான பயிற்சியை மேற்கொள்வது தான் இதற்கான நிவாரணமாக பரிந்துரைக்கப்படுகிறது. அதேபோல் தாடைப் பகுதிக்கான செயல்பாடுகளை குறைத்துக் கொள்ளவேண்டும். வாயில் சூயிங்கம் போட்டு மென்றுகொண்டேயிருக்கக்கூடாது. இதனை அலட்சியப்படுத்தினால் சளித் தொல்லை, ஈறு கோளாறுகள், பல் வலி, ஒர்த்தரைடீஸ் போன்ற பாதிப்புகள் உருவாகும். இதன் போது வலி ஏற்பட்ட இடங்களில் சூடாகவோ அல்லது குளிர்ந்த நீரிலோ ஒத்தடம் கொடுப்பதும் நிவாரணமளிக்கும். அத்துடன் கடினமான உணவுகளை தவிர்த்து மென்மையான மற்றும் திரவ நிலையிலான உணவுகளை எடுத்துக் கொள்ளவேண்டும். போஷர் தெரபியை பயன்படுத்தியும் சிகிச்சைப் பெறலாம். மனஅழுத்தத்தை குறைக்கும் சிகிச்சையை தொடர்ந்து பெற்று வந்தால் இத்தகைய பாதிப்பிலிருந்து முழுமையாக குணமடையலாம்.

வைத்தியர். ஹரி

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்