இன்றைய சூழலில் எம்முடைய இளம் தாய்மார்கள் தவமிருந்து பெற்றெடுத்த பிள்ளைகள் குறிப்பாக பிறந்தது முதல் ஒரு வயதிற்குள்ளாக அவர்களை தொடர்ச்சியாக அவதானித்து கொண்டிருப்பார்கள். இருப்பினும் பிள்ளைகளுக்கு ஏதேனும் அறிகுறிகளை வெளிப்படுத்தாத தொற்று பாதிப்பிற்கு ஆளாகி இருக்கலாம். இதனை பெற்றோர்கள் எப்படி அவதானிப்பது? என்பது குறித்து வைத்திய நிபுணர்கள் பின்வருமாறு விவரிக்கிறார்கள்.
பெரும்பாலும் ஒரு வயதிற்குட்பட்ட பச்சிளம் குழந்தைகள் ஏதேனும் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதற்கான அறிகுறிகள் வெளிப்படும். சில பிள்ளைகளுக்கு மட்டும் அதற்கான அறிகுறிகளை துல்லியமாக அவதானித்தால் மட்டுமே கண்டறிய இயலும். பச்சிளம் குழந்தைகள் தாயிடம் தாய்ப்பால் அருந்துவது உள்ளிட்ட நாளாந்த நடவடிக்கைகளில் திடீரென்று சோர்வு ஏற்பட்டால்... இவற்றை முதன்மையான அறிகுறியாக எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தத் தருணத்தில் பிள்ளைகள் பெற்றோர்களிடத்தில் இருந்தாலும் தங்களுடைய வழக்கமான உற்சாகத்தை வெளிப்படுத்த மாட்டார்கள்.
இதைத் தொடர்ந்து தாய்ப்பால் அருந்திக் கொண்டிருக்கும்போது அதிலிருந்து விலகி விடுவது... அதாவது தாய்ப்பால் அருந்துவதில் ஆர்வம் காட்டாத நிலை. சில பிள்ளைகளுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும்.. அவை காய்ச்சல் என்ற அறிகுறியை வெளிப்படுத்தாமல், சளி, இருமல் என்ற அறிகுறியை மட்டும் வெளிப்படுத்தும். அதே தருணத்தில் அவர்களுடைய தொப்புள் கொடியிலிருந்து ஏதேனும் திரவம் வெளியானாலும் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என அவதானிக்கலாம். தொப்புள் மட்டும் அல்லாமல் கழுத்து மற்றும் சிறுநீர் கழிக்கும் பகுதியிலும் ஏதேனும் இயல்பை கடந்த மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். அதுவும் தொற்று பாதிப்பின் அறிகுறியாக இருக்கக்கூடும்.
இவற்றையெல்லாம் கடந்து சில பிள்ளைகள் சுவாசத்தில் மாற்றம், பேதி, வாந்தி ,சில வினாடிகள் மட்டுமே நீடிக்கும் வலிப்பு ...என பல அறிகுறிகள் பச்சிளம் குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதற்குரிய அறிகுறியாக உணர்ந்து உடனடியாக அருகில் உள்ள பச்சிளம் குழந்தைகளுக்கான வைத்தியரை சந்தித்து அவர் பரிந்துரைக்கும் ஆலோசனையும், சிகிச்சையையும் மேற்கொள்ள வேண்டும்.
வைத்தியர் ஸ்ரீதேவி தொகுப்பு அனுஷா.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM