இன்றைய அமைச்சரவை முடிவுகள்

Published By: Priyatharshan

23 Aug, 2017 | 02:47 PM
image

அமைச்சரவை சந்திப்பின்போது எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அமைச்சரவை முடிவுகள் வருமாறு,

1. ஆசிய தேர்தல் பங்காளிகளின் நான்காவது மாநாடு – 2018 (விடய இல. 05)

Asian Network for Free Elections ஆனது ஆசிய வலய நாடுகளில் தேர்தல் தொடர்பில் பொதுவாக காணப்படுகின்ற பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கு தீர்வுகாண்பதற்கு மற்றும் அந்நாடுகளில் சட்டவாட்சியினை உறுதி செய்து கொள்வதற்காக வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துவதற்காக அரச சார்பற்ற அமைப்பாகும். அவ்வலயமைப்பினால் ஒழுங்கு செய்யப்படுகின்ற ஆசிய தேர்தல் பங்காளிகளின் நான்காவது மாநாட்டினை 2018 ஆம் ஆண்டில் இலங்கை நடாத்துவதற்காக சம தலைமைத்துவத்தை தாங்குவதற்கு இலங்கை தேர்தல் ஆணைக்குழு இணக்கம் தெரிவித்துள்ளது.

இம்மாநாட்டின் மூலம் இலங்கை தேர்தல் செயன்முறை தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு பயிற்சிகளை வழங்குவதற்கும், பிற உறுப்பு நாடுகளின் அநுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கும் இதன் மூலம் வாய்ப்பு கிடைக்கின்றது.

அதனடிப்படையில், ஆசிய தேர்தல் பங்காளிகளின் நான்காவது மாநாட்டினை 2018 ஆம் ஆண்டில் இலங்கையில் நடாத்துவதற்கும் மற்றும் அதற்காக சம தலைமைத்துவத்தை வழங்குவது தொடர்பில் இலங்கை தேர்தல் ஆணைக்குழு மற்றும் சுதந்திர தேர்தலுக்காக ஆசிய வலயமைப்புக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

2. Subscriber Identification Module (SIM) அட்டைகளை உரிய முறையில் பதிவு செய்தல் (விடய இல. 07)

Subscriber Identification Module (SIM) அட்டைகளை பயன்படுத்தி இன்று பல்வேறு குற்றச்சாட்டுகளும், மோசடிகளும் இடம்பெறுவதாக இணங்காணப்பட்டுள்ளது. ஒருவர் பல சிம் அட்டைகளை பயன்படுத்தியே குறித்த குற்றங்களில் ஈடுபடுகின்றனர். எனவே கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகின்ற குற்றங்களை கட்டுப்படுத்துவதையும், தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் சுதந்திரத்தை பாதுகாப்பதையும் உறுதிப்படுத்துவதற்கான தகவல்களை உள்ளடக்கி சிம் அட்டைகளை பதிவுசெய்வது அத்தியவசியமாகியுள்ளது. அதனடிப்படையில் உரிய முறையில் சிம் அட்டைகளை புகைப்படத்துடன் பதிவுசெய்வதற்கான முறையினை பின்பற்றுமாறு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் கையடக்கத் தொலைப்பேசி சேவை வழங்குனர்களிடம் ஏற்கனவே வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அப்பணியினை முறையாக மேற்கொள்வதற்காக 1991 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க இலங்கை தொலைத்தொடர்பு சட்டத்தின் விதப்புரைகளின் கீழ் விடய பொறுப்பான அமைச்சரின் மூலம் வேண்டுகோள் விடுப்பதற்கும், குறித்த செயன்முறையினை செயற்படுத்தும் அதிகார சபை அதிகாரத்தினை இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு ஒப்படைப்பதற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

3. மக்கள் போக்குவரத்து முச்சக்கரவண்டி சேவை மற்றும் பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து செய்கின்ற வேன் சேவையின் தரத்தினை விருத்தி செய்தல் (விடய இல. 10)

தற்போது தரமற்ற முறையில் முன்னெடுக்கப்பட்டுவரும் மக்கள் போக்குவரத்து முச்சக்கரவண்டி சேவை மற்றும் பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து செய்கின்ற வேன் சேவையின் தரத்தினை விருத்தி செய்வதன் அவசியத்தை கவனத்திற் கொண்டு, அது தொடர்பில் பின்பற்றப்பட உகந்த செயன்முறைகள் தொடர்பில் சிபார்சுகளை முன்வைப்பதற்கு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழுவின் சிபார்சின் அடிப்படையில் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் உறுப்புரைகளின் படி இவ்விடயத்துறையானது மாகாண சபைகளுக்கு உரித்தான விடயபரப்பு என்பதனை கவனத்திற் கொள்ளல்.

இவ்விரண்டு சேவைகளினதும் ஆகக் குறைந்த தரத்தினை உள்ளடக்கிய ஆலோசனை மற்றும் சட்டக் கோவையொன்றினை தயாரிப்பதற்கு அவசியமான தொழில்நுட்ப ஒத்துழைப்பினை பெற்றுக் கொடுப்பதற்கு தேசிய தொழில்நுட்ப குழுவொன்றினை நியமித்தல்.

பாதுகாப்பற்ற போக்குவரத்து முறையான முச்சக்கரவண்டி பயன்பாட்டினை குறைத்து, பாதுகாப்பான வாடகை போக்குவரத்து சாதனங்களுக்கு பிரவேசிக்கும் அரசாங்கத்தின் நீண்டகால கொள்கையினை பின்பற்றுதல்.

4. மக்கள் போக்குவரத்து பஸ் கட்டணங்களை தீர்மானிப்பது தொடர்பான கொள்கையினை தற்காலத்துக்கு பொருத்தமான முறையில் மீண்டும் தயாரித்தல் (விடய இல. 11)

வருடாந்த பஸ் கட்டண திருத்தமானது 2002 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட கொள்கையின் அடிப்படையிலேயே இன்றும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆகவே தற்காலத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப, சமூக, பொருளாதார மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு குறித்த கொள்கையில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற தேவை உணரப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் பஸ் சங்கங்கள் மற்றும் பயணிகள் சங்கங்கள் என்பவற்றுடன் பேச்சுவார்த்தை நடாத்தி, பஸ் கட்டணங்களில் திருத்தங்களை செய்வதற்காக பின்பற்றுவதற்காக புதிய கொள்கையொன்றை தயாரிப்பதற்கு உரிய நிறுவனங்களின் அதிகாரிகள் அடங்கிய அறிஞர் குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

5. புகையிரதத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற பொதிப் போக்குவரத்துக்கு உரிய கட்டணங்களில் திருத்தம் செய்தல் (விடய இல. 12)

இலங்கை புகையிரத திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற பொதிப் போக்குவரத்துக்கு கடந்த 09 வருட காலமாக திருத்தம் மேற்கொள்ளாமல் ஒரே வகையான கட்டணங்களே அறவிடப்படுகின்றன. 

அத்தொகையானது ஏனைய பொதி போக்குவரத்துக்கு அறவிடப்படுகின்ற கட்டணங்களுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவாகும். அதனால், சாதாரண மக்களுக்கு மேலதிக சுமையினை சுமத்தாமல், வணிகமற்ற மற்றும் நுகர்வுத் தேவையின் அடிப்படையில் போக்குவரத்து பொதிகள் தவிர்ந்த ஏனைய பொதிகள் போக்குவரத்துக்காக தற்போது அறவிடப்படுகின்ற கட்டணங்களை 50 வீத்தினால் இனால் அதிகரிப்பது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

6. பிள்ளைப்பேறு அற்ற தன்மை (மலட்டுத்தன்மை) தொடர்பில் அறிவுறுத்தும் வேலைத்திட்டம் (விடய இல. 14)

சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சிடம் உள்ள தகவல்களின் அடிப்படையில்ரூபவ் கணவன் மனைவிக்கு இடையில் 15 வீதத்திற்கும் அதிகமான தொகையினர் பிள்ளைப்பேறு அற்ற நிலையில் உள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், பிள்ளைப்பேறு அற்ற தன்மை (மலட்டுத்தன்மை) தொடர்பான பிரச்சினைக்காக பொதுமக்கள் மற்றும் சுகாதார சேவை அதிகாரிகளின் கவனத்தை செலுத்தி, இவ்வருடத்தில் தேசிய குடும்ப திட்டமிடல் தினத்தினை செப்டம்பர் 26 ஆம் திகதி கொண்டாடுவதற்கு சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

7. ‘அமரதேவ அசபுவ’ நிர்மாணிப்பதற்காக பத்தரமுல்லை ‘அப்பே கம’ சூழலினுள் அமைந்துள்ள பூமிப்பகுதியொன்றை ஒதுக்கிக் கொள்ளல் (விடய இல. 20)

‘அமரதேவ அசபுவ’ நிர்மாணிப்பதற்காக பத்தரமுல்லை ‘அபே கம’ சூழலினுள் அமைந்துள்ள 100 பேர்ச்சஸ் பூமிப்பகுதியொன்றை நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்கு ஒதுக்கிக் கொள்வது தொடர்பில் பாரிய நகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

8. வெள்ளவத்தை கால்வாய் பரப்பினுள் பாதுகாப்பற்ற முறையில் அமைந்துள்ள கட்டிடங்களை மீள் நிர்மாணம் செய்தல் (விடய இல. 21)

வெள்ளவத்தை கால்வாய் பரப்பினுள் பாதுகாப்பற்ற முறையில் அமைந்துள்ள ஸ்ரீ சுகத விகாரை மற்றும் அவ்விகாரையுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிறுவர் இல்லம் ஆகிய கட்டிடங்களை பிறிதொரு இடத்தில் மீள் நிர்மாணம் செய்வதற்காக இலங்கை நில மீட்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துக்கு உரித்தான தெஹிவளை, அத்திடிய பிரதேசத்தில் அமைந்துள்ள இடப்பகுதியினை அவ்விகாரைக்கு ஒதுக்கிக் கொடுப்பது தொடர்பில் பாரிய நகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

9. இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் மிகவும் குறைந்த வருமானம் பெறுகின்ற 600 குடும்பங்களுக்காக வீடுகளை நிர்மாணித்தல் (விடய இல. 23)

இலங்கையில் குறைந்த வருமானம் பெறுகின்ற 600 குடும்பங்களுக்காக வீடுகளை நிர்மாணித்து கொடுப்பதற்கு தேவையான நிதியுதவியினை பெற்றுக் கொடுப்பதற்கு இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், இந்திய அரசாங்கத்தினால் பெற்றுக் கொடுக்கப்பட உள்ள 300 மில்லியன் ரூபா தொகையினை பெற்றுக் கொள்ளவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கும், அந்நிதியினை பயன்படுத்தி 25 மாவட்டங்களும் உள்ளடங்கும் வகையில் மிகவும் குறைந்த வருமானம் பெறுகின்ற 600 குடும்பங்களை இலக்காகக் கொண்டு வீடமைப்பு வேலைத்திட்டமொன்றை “செமட செவன கிராமிய சக்தி” முன்மாதிரிக் கிராம வேலைத்திட்டத்தின் கீழ் செயற்படுத்துவது தொடர்பில் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. தலதா மாளிகையின் தங்கத்திலான கோபுரத்தை திருத்தம் செய்தல் (விடய இல. 25)

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் புத்தசாசன அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் இணைந்து முன்வைத்த ஒன்றிணைந்த யோசனையினை கவனத்திற் கொண்டு, 2017 ஆம் ஆண்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செலவு விபரங்களின் கீழ் காணப்படுகின்ற நிதியினை பயன்படுத்தி, 44.89 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் தலதா மாளிகையின் தங்கத்திலான கோபுரத்தை திருத்தியமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. Court Automation வேலைத்திட்டம் (விடய இல. 26)

இந்நாட்டு நீதிமன்ற துறையில் பிரதான பிரச்சினையொன்றாக கருதப்படுகின்ற வழக்கு தீர்ப்புகளில் காணப்படுகின்ற காலதாமதத்தை குறைப்பதற்கு அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

அதனடிப்படையில், Court Automation வேலைத்திட்டத்தின் கீழ் வழக்கு தொடரல் மற்றும் வழக்கு கோப்புகளை முகாமைத்துவம் செய்தல் போன்றவற்றை முறைப்படுத்துவதற்கு தேவையான டிஜிடல் அடிப்படை வசதிகளை நீதிமன்றங்களில் ஸ்தாபிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்காக 2016 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

இவ்வேலைத்திட்டத்தினை துரித கதியில் செயற்படுத்தும் நோக்கில் அதற்காக தொழில்நுட்ப மற்றும் நிதி வசதி கொண்ட நிறுவனங்களில் இருந்து யோசனைகளை கோருவதற்கு நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. இலங்கை பாராளுமன்றத்தின் 70 ஆண்டு பூர்த்தியினை கொண்டாடுதல் (விடய இல. 27)

இலங்கை பாராளுமன்றத்துக்கு 70 வருட பூர்த்தியினை முன்னிட்டு, “இலங்கையில் 70 வருட பாராளுமன்ற ஜனநாயகத்தினை” கொண்டாடுவதற்கு சார்க் நாடுகளின்  சபாநாயகர்களின் மாநாடு ஒன்றினை 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கை பாராளுமன்றத்தின் புதிய ஒன்று கூடலினை கோலாகளமாக கொண்டாடுவதற்கும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் 70 வருட காலமாக இலங்கை பாராளுமன்றம் தொடர்பான தகவல்கள் அடங்கிய விசேட மலர் ஒன்றை மும்மொழிகளிலும் வெளியிடுவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளதுடன், அதற்கு தேவையான 03 மில்லியன் ரூபா நிதியினை பெற்றுக் கொள்வது தொடர்பில் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்கவினால்  முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. 2014 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் பேருவளை, அளுத்கமை ஆகிய பிரதேசங்களில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினால் உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்காக நட்டஈடு வழங்குதல் (விடய இல. 30)

2014 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் பேருவளை, அளுத்கமை ஆகிய பிரதேசங்களில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினால் உயிரிழந்த நபர் ஒருவருக்காக 02 மில்லியன் ரூபா வீதம் அவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கும், அச்சம்பவத்தினால் காயமடைந்த நபர் ஒருவருக்காக ஆகக் கூடிய 500,000 ரூபா வீதம் நட்டஈடு தொகையினை வழங்குவதற்கும், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனினால்  முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. முல்லைத்தீவு மாவட்டத்தின் கோப்பாபுலவு கிராமத்து மக்களை மீள்குடியேற்றுவதற்காக வேண்டி காணிகளை விடுவித்தல் (விடய இல. 31)

முல்லைத்தீவு மாவட்டத்தின் கோப்பாபுலவு கிராமத்து மக்களை மீள்குடியேற்றுவதற்காக வேண்டி இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 432 ஏக்கர் தனியார் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 111 ஏக்கர் காணியினை விடுவிப்பதற்கு இராணுவ தளபதி இணக்கம் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில்ரூபவ் அக்காணிப்பகுதியினை விடுவிப்பதற்காக வேண்டி அவ்விடத்தில் காணப்படுகின்ற இராணு முகாமினை பிறிதொரு இடத்தில் ஸ்தாபிப்பதற்கு தேவையான நிதியினை ஒதுக்கிக் கொள்வதற்காக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர்  டி.எம்.சுவாமிநாதனினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. வெலிசறையில் அமைந்துள்ள கடற்படை வைத்தியசாலை (கொழும்பு) கூரையில் சூரிய சக்தி பிரிவொன்றை பொருத்துதல் (விடய இல. 40)

வெலிசறையில் அமைந்துள்ள கடற்படை வைத்தியசாலையினை (கொழும்பு) முன்னெடுத்துச் செல்லும் போது ஏற்படுகின்ற மின்சார செலவினை குறைப்பதற்காக வேண்டி அவ்வைத்தியசாலையின் கூரையில் 450 கி.வொ. கொள்ளளவினைக் கொண்ட சூரிய சக்தி பிரிவொன்றை பொருத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் பகுதி இலக்கம் 01 இல் தீர்வை வரியற்ற கடைத்தொகுதியொன்றை (Operation of Core Category Duty Free Concession)முன்னெடுத்துச் செல்லல் (விடய இல. 41)

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் பகுதி இலக்கம் 01 இல் வருகை மற்றும் வெளியேறும் மட்டுப்படுத்தப்பட்ட பிரதேசத்தில் பிரதான தீர்வை வரியற்ற கடைத்தொகுதியொன்றை (Operation of Core Category Duty Free Concession) அடுத்து வரும் 05 வருட காலத்துக்கு முன்னெடுத்துச் செல்வதற்கான இரண்டாவது ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் சுவிட்சர்லாந்தின் Dufry AG நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

17. பாடசாலை மாணவர்களுக்காக கூட்டுபொறுப்புடைய சுகாதார காப்புறுதியொன்றினை பெற்றுக் கொடுத்தல் (விடய இல. 44)

05 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட வயதுப்பிரிவில் காணப்படுகின்ற 4.5 மில்லியன் இந்நாட்டு பாடசாலை மாணவர்களுக்காக 200,000 பெறுமதியான காப்புறுதி வீதம் இலவசமாக பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துவதற்கு 2017 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் 2,700 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டது.

முன்மொழியப்பட்டுள்ள காப்புறுதி திட்டத்தின் ஊடாக வெளிச் சிகிச்சைகளுக்காக 10,000 ரூபா வீதமும்,  வைத்தியசாலையில் அனுமதி பெற்று சிகிச்சை பெறும் குறித்த வயது நோயாளர்களுக்கு 100,000 ரூபா காப்புறுதியும் வழங்கப்பட உள்ளது. மேலும், பாடசாலை மாணவர்களின் அவசர மரணத்தின் போது குறித்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு 100,000 ரூபா வீதமும், தமது தாய் அல்லது தந்தை மரணதுக்காக குறித்த பாடசாலை மாணவருக்கு 75,000 ரூபா வீதமும் காப்புறுதி திட்டத்தின் மூலம் செலுத்தப்பட உள்ளது. மேலும் பாடசாலை மாணவர் பூரண அங்கவீனத்துக்கு உள்ளாகும் போது 100,000 ரூபா வீதமும், பகுதியளவில் காயமடைகின்ற போது 50,000 ரூபா தொடக்கம் 100,000 வரையிலும் காப்புறுதி தொகை வழங்கப்பட உள்ளது.

அதனடிப்படையில், அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 2,348 மில்லியன் ரூபா வருடாந்த தவணையின் கீழ், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் மூலம் இக்காப்புறுதி செயன்முறையினை செயற்படுத்துவது தொடர்பில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

18. சுகததாச தேசிய விளையாட்டரங்கின் பயிற்சி (மாதிரி) ஓட்ட சுவடுகளை மறுசீரமைத்தல் (விடய இல. 46)

சுகததாச தேசிய விளையாட்டரங்கின் 400மீட்டர், முதல் நிலை மாதிரி ஓட்டச் சுவடு மற்றும் 200 மீட்டர் ஓட்டச்சுவடுகளை மறுசீரமைப்பதற்கான ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 269.33 மில்லியன் ரூபாக்களுக்கு Access – Conica JV நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

19. சங்கைக்குரிய மாதுலுவாவே சோபித தேரரின் ஞாபக தூபியினை அமைத்தல் (விடய இல. 47)

நல்லாட்சிக்கு வித்திட்ட சங்கைக்குரிய மாதுலுவாவே சோபித தேரரின் ஞாபக தூபியினை அமைப்பதற்கும், அதற்காக நிதியினை அரசாங்கத்தினால் பெற்றுக் கொடுப்பதற்கும்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

20. நிலவுகின்ற வறட்சி காலநிலையினால் பாதிப்புக்கு உள்ளான பொதுமக்களுக்கு நிவாரணமளித்தல் மற்றும் வாழ்க்கைத்தரத்தை பாதுகாத்தல் (விடய இல. 48)

நிலவுகின்ற வறட்சி காலநிலையினால் பாதிப்புக்கு உள்ளான பொதுமக்களுக்கு கீழ்க்காணும் அடிப்படையில் நிவாரணம் அளிக்கப்பட்டதாகவும், அதனை அடுத்து வரும் 02 மாதங்களிலும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் கவனத்திற் கொள்ளப்பட்டது.

பாதிப்புக்கு உள்ளான 20 மாவட்டங்களில் உள்ள 117 பிரதேச செயலக பிரிவுகளில் வசிக்கின்ற 240,338 குடும்பங்களுக்காக குடிநீர் வசதிகளை செய்து கொடுத்தல்.

வறட்சி காலநிலை நிவாரணமாக மாதாந்தம் 5,000 ரூபா பெறுமதியான உலர் உணவு கூப்பன்கள் வழங்குதல்

வனஜீவராசிகளுக்காக நீர் வழங்குவதற்காக வேலைத்திட்டமொன்றை செயற்படுத்தல்

நிதி நெருக்கடிக்கு முகங்கொடுக்கின்ற சில கூட்டுறவு சங்கங்களுக்கு மாவட்ட செயலாளர் ஊடாக முற்கொடுப்பனவு செய்தல்.

21.  2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சில வகையான பொலிதீன் இறக்குமதி, உற்பத்தி மற்றும் பாவனை என்பவற்றை தடைசெய்யும் தீர்மானத்தினை செயற்படுத்தல் (விடய இல. 49)

2017.07.11 ஆம் திகதி அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு இணங்க 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சில வகையான பொலிதீன் இறக்குமதி, உற்பத்தி மற்றும் பாவனை என்பவற்றை தடைசெய்யும் தீர்மானத்தினை செயற்படுத்துவதற்கும், அத்தடையினை செயற்படுத்துவதனால் பாதிப்படைகின்ற பொலிதீன் உற்பத்தி தொடர்பான அனைத்து தரப்பினரையும் முறையான முறையில் மாற்று முறையொன்றுக்கு உள்வாங்குவது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு உரிய நிறுவனங்களின் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றினை நியமிப்பதற்கும் அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி தேர்தலை இடைநிறுத்தக் கோரி தாக்கல்...

2024-07-13 18:33:43
news-image

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் 

2024-07-13 18:06:56
news-image

அநுராதபுரத்தை மீண்டும் உலக பிரசித்தி பெற்ற...

2024-07-13 18:33:40
news-image

பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா பயணித்த...

2024-07-13 17:43:11
news-image

பதுளையில் பள்ளத்தில் வீழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து...

2024-07-13 17:26:31
news-image

கெப் வாகனம் - மோட்டார் சைக்கிள்...

2024-07-13 17:29:32
news-image

மட்டக்களப்பில் 12வது நாளாக இன்றும் தொடரும்...

2024-07-13 16:49:59
news-image

மாமியாரை கொடூரமாக தாக்கிய மருமகள் கைது!

2024-07-13 16:00:13
news-image

திடீரென தீ பற்றியெரிந்த முச்சக்கரவண்டி ;...

2024-07-13 16:11:13
news-image

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பயணித்த...

2024-07-13 15:34:34
news-image

கிண்ணியாவில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் கைது...

2024-07-13 13:56:12
news-image

முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரரின் வீட்டில்...

2024-07-13 13:50:39