ஜிந்துபிட்டி  ஜெயந்தி நகர் சிவசுப்பிரமணிய ஆலையத்தில் ஆதி ஸ்ரீ ஐய்யப்ப சேத்திரத்தின் கருப்பண்ண  பூஜை

31 Dec, 2025 | 07:48 PM
image

கொழும்பு 13, 69A ஹின்னி அப்புஹாமி மாவத்தையில் அமைந்துள்ள ஆதி ஸ்ரீ ஐயப்ப சேத்திரத்தின் 50வது ஆண்டு பொன்விழா, அகில இலங்கை ஐயப்ப சேவா சங்கத்தினரின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

கார்த்திகை முதலாம் திகதி (17.11.2025) முதல் 03.01.2026 வரை தீர்த்த யாத்திரை மேற்கொள்ள ஐயப்பன் அருள் பாலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, 03.01.2026 அன்று மாலை, இந்தியாவிலிருந்து புதிதாக தருவிக்கப்பட்ட 6 அடி 1 அங்குலம் 4 இஞ்ச் உயரமுள்ள கருப்பண்ண சுவாமி திருவுருவத்திற்கு விசேட பூஜை வெகுசிறப்பாக நடைபெறவுள்ளது.

இந்த பூஜை, ஆலய அறங்காவலர்களான பிரதம குருசாமி பொன். ரவீந்திரகுமரன் தலைமையிலும், பிரதித் தலைவர் செந்தமிழ்ச்செல்வன் குருசாமி, செயலாளர் ஆ. சந்திரதாஸ் குருசாமி ஆகியோரின் வழிநடத்தலிலும், இராசையா குருசாமி, மகேந்திரன் குருசாமி, ரவீந்திரன் குருசாமி, சந்திரசேகரன் குருசாமி உள்ளிட்டோரின் ஒத்துழைப்புடன், ஜெயந்திநகர் ஜிந்துபிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தில் நடைபெறவுள்ளது.

இவ்விசேட பூஜையில் பக்தர்கள் மற்றும் அடியார்கள் அனைவரும் கலந்து கொண்டு ஐயப்பனின் அருளாசியைப் பெற்றிடுமாறு, ஆலயத்தின் ஊடகச் செயலாளர் பொன். பத்மநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

"நூலைப்படி" : நாட்டிய நூல்களின் அறிமுக...

2026-01-19 23:27:21
news-image

கலாமித்ரா விருது விழா : பாடல்...

2026-01-19 21:37:23
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் அறநெறிப்...

2026-01-19 16:57:55
news-image

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர்,  தென்னிந்திய...

2026-01-18 16:30:25
news-image

கண்டியில் கலாஞ்சலி நாட்டிய நிகழ்வு ஏற்பாடு

2026-01-16 18:37:47
news-image

நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் பொங்கல் விழா...

2026-01-16 11:31:03
news-image

செல்வி தானியா சுரேந்திரனின் பரதநாட்டிய அரங்கேற்றம்

2026-01-15 18:30:10
news-image

வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2026-01-15 21:41:08
news-image

கொழும்பு - காக்கைதீவில் மாபெரும் பொங்கல்...

2026-01-15 17:58:43
news-image

“Lanka Ride” துவிச்சக்கரவண்டிப் பேரணி நாளை...

2026-01-15 11:43:05
news-image

'MEANDERING MOODS' ஓவியக் கண்காட்சி

2026-01-14 15:34:00
news-image

சவூதி அரேபியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இலங்கையில்...

2026-01-13 17:01:00