ஐந்து ஆண்டுகள் கடந்தும் ஆசிரியர் நியமனம் இல்லை : மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

31 Dec, 2025 | 03:40 PM
image

மன்னாரில் ஆசிரியர் பணிக்காக அமர்த்தப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஐந்து ஆண்டுகள் ஆகியும் நியமனம் கிடைக்காத  நிலையில் தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்க  நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மன்னார் அலுவலகத்தில் புதன்கிழமை (31) முறைப்பாட்டை கையளித்துள்ளனர்.

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்   ஆசிரியர் பணிக்காக அமர்த்தப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகியும் இதுவரை அவர்களுக்கு நியமனம் வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட குறித்த பட்டதாரி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

நியமனங்களை கோரி பல போராட்டங்களை முன்னெடுத்து இருந்தாலும்  கடந்த அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமும்  குறித்த பட்டதாரிகளை கவனத்தில் கொள்ளவில்லை என கவலை தெரிவித்துள்ளனர்.

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் படத்திலிருந்து அவர்கள் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக ஆசிரியர் பணியை முன்னெடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில்  புதன்கிழமை (31) நாடளாவிய ரீதியில் ஆசிரியர்களுக்கான நியமனத்தை வழங்க கோரி கோரி இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாட்டை கையளித்துள்ளனர்.

இந்த நிலையில் மன்னாரில் உள்ள சுமார் 170 க்கு மேற்பட்ட ஆசிரியர் பணியை முன்னெடுக்கும் பட்டதாரி மாணவர்கள்    இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மன்னார்  அலுவலகத்தில் தமது கையெழுத்து அடங்கிய முறைப்பாடு ஒன்றை கையளித்துள்ளனர்.

மன்னார் மாவட்ட   பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் ரீ. எம். றாகித்  தலைமையில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ஜப்பான் தூதுக்குழு...

2026-03-14 17:26:09
news-image

தற்போதைய அரசாங்கத்தின் தரமற்ற நிலக்கரி ஊழலானது...

2026-03-14 17:20:13
news-image

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ஜப்பான் தூதுக்குழு...

2026-03-14 17:12:12
news-image

தமிழ்க் கட்சிகள் கடமை தவறிவிட்டன; தலைமையை...

2026-03-14 17:05:14
news-image

சுகாதார சேவையில் பாரிய விரிவாக்கம்: 2,918...

2026-03-14 17:02:52
news-image

கட்டானவில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர்...

2026-03-14 16:39:49
news-image

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை...

2026-03-14 16:11:41
news-image

காத்தான்குடி கடற்கரையில் 25 அடி நீளமான...

2026-03-14 16:08:29
news-image

சுயாதீன தேசிய பெண்கள் ஆணைக்குழுவைச் செயற்படுத்துக:...

2026-03-14 16:08:01
news-image

இலங்கை - தாய்லாந்து பௌத்த உறவை...

2026-03-14 15:43:28
news-image

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க ஐக்கிய மக்கள் சக்தி...

2026-03-14 15:15:53
news-image

விரிவான ஆலோசனையின் மூலம் தயாரிக்கப்பட்ட "தேசிய...

2026-03-14 15:03:57