பஹ்ரைன் இராச்சியத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் “இலங்கை தயாராக உள்ளது” என்ற சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்வு!

31 Dec, 2025 | 03:15 PM
image

பஹ்ரைன் இராச்சியத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் “இலங்கை தயாராக உள்ளது” (Sri Lanka Is Ready) எனும் தொனிப்பொருளில் சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்வு ஒன்றை நடத்தியது. 

இந்த நிகழ்வு சீப் பகுதியில் உள்ள கிராண்ட் சுவிஸ்-பெல் ஹோட்டலில் திங்கட்கிழமை (29) நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் பஹ்ரைனின் சுற்றுலாத் துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும்  ஊடகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, இலங்கையின் பாரம்பரியம் மற்றும் கலை மரபுகளை வெளிப்படுத்தும் முகமாக பாரம்பரிய கலாசார நடன நிகழ்வுகளும் இடம்பெற்றது. 

இலங்கையின் கலாசார பாரம்பரியம், கடற்கரைகள், வனவிலங்குகள், சுற்றுலா, ஆரோக்கியம் மற்றும் ஆயுர்வேதம் போன்ற தனித்துவமான அம்சங்கள் தொடர்பில் இந்த நிகழ்வில் சுட்டிக்காட்டப்பட்டது.

இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் விதமாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின் ஊடாக பஹ்ரைன் இராச்சியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவு வெளிப்படுத்தப்பட்டது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

"நூலைப்படி" : நாட்டிய நூல்களின் அறிமுக...

2026-01-19 23:27:21
news-image

கலாமித்ரா விருது விழா : பாடல்...

2026-01-19 21:37:23
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் அறநெறிப்...

2026-01-19 16:57:55
news-image

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர்,  தென்னிந்திய...

2026-01-18 16:30:25
news-image

கண்டியில் கலாஞ்சலி நாட்டிய நிகழ்வு ஏற்பாடு

2026-01-16 18:37:47
news-image

நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் பொங்கல் விழா...

2026-01-16 11:31:03
news-image

செல்வி தானியா சுரேந்திரனின் பரதநாட்டிய அரங்கேற்றம்

2026-01-15 18:30:10
news-image

வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2026-01-15 21:41:08
news-image

கொழும்பு - காக்கைதீவில் மாபெரும் பொங்கல்...

2026-01-15 17:58:43
news-image

“Lanka Ride” துவிச்சக்கரவண்டிப் பேரணி நாளை...

2026-01-15 11:43:05
news-image

'MEANDERING MOODS' ஓவியக் கண்காட்சி

2026-01-14 15:34:00
news-image

சவூதி அரேபியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இலங்கையில்...

2026-01-13 17:01:00