மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த 6 பேரும் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை கொழும்பிலிருந்து வேகமாக சென்ற ஜீப் ரக வாகனமொன்றே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

வாகனத்தை செலுத்திய சாரதியின் தூக்கம் காரணமாக குறித்த வாகனம் மின்கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

விபத்தையடுத்து வாகனத்தில் பயணித்த 6 பேரும் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 விபத்துக்குள்ளானவர்கள் அனைவரும் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.