மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 1995ஆம் ஆண்டு நடைபெற்ற பொக்சிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அசன்க குருசின்ஹ சதம் குவித்து 30 வருடங்கள் ஆன நிலையில் ஸ்பைசி விக்கெட் உணவகத்தில் பிரத்தியேக விழா ஒன்று நேற்று திங்கட்கிழமை (29) நடத்தப்பட்டது.

அவுஸ்திரேலயாவுக்கு எதிராக மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் 1995இல் நடைபெற்ற பொக்சிங் டே டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அசன்க குருசின்ஹ 143 ஓட்டங்களைப் பெற்றார்.
மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் இற்றைவரை இலங்கை சார்பாக சதம் குவித்த ஒரே ஒரு வீரர் அசன்க குருசின்ஹ ஆவார்.
இந் நிகழ்வில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அரவிந்த டி சில்வா, சாலிய அஹங்கம, குமார் தர்மசேன, சாமர துனுசிங்க, ரங்கன ஹெரத் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1995ஆம் ஆண்டில் டேவ் வாட்மோர் மற்றும் அலெக்ஸ் கொன்டூரிஸ் ஆகிய பயிற்றுநர்களின் சேவைகளைப் பெற அப்போதைய இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு பெரிதும் உதவிய கிரிக்கெட் விக்டோரியாவின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கென் ஜேக்கப்ஸ் மற்றும் இயன் கிரஃபோர்ட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கெதி மற்றும் டேவிட் க்ரூஸ் ஆகியோரால் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் கிரிக்கெட் ஒஸ்ட்ரேலியாவின் (அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனம்) முன்னாள் தலைவரும் குருசின்ஹவின் வடக்கு மெல்போர்ன் கிரிக்கெட் கழகத்தின் சக வீரருமான ஏர்ல் எடிங்ஸ் மற்றும் பொப் பெரிஷ் குடும்பத்தினர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

டெஸ்ட் அந்தஸ்து பெறுவதற்கு 1981ஆம் ஆண்டில் இலங்கை விண்ணப்பித்தபோது அதற்கு ஆதரவாக கிரிக்கெட் ஒஸ்ட்ரேலியாவின் முன்னாள் தலைவரான பொப் பெரிஷ் வாக்களித்திருந்தார்.
(நன்றி: ரெக்ஸ் க்ளமன்டைன்; படங்கள்: ஜோஹன் ஜெயசிங்க (SNNI)











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM