(செ.சுபதர்ஷனி)
சுகாதார துறையில் எழுந்துள்ள சிக்கல்களுக்கு தீர்வுகளை வழங்குவதற்குப் பதிலாக, பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டும் ஊடகங்களையும் சிவில் அமைப்புகளையும் ஒடுக்க சுகாதார அமைச்சர் முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது. சந்திரனைக் காட்டும் போது விரலை வெட்ட நினைப்பது போன்ற இச்செயல் அமைச்சருக்கு நல்லதல்ல. ஊடகங்களை முடக்குவதன் மூலம் சுகாதார நெருக்கடியை மறைக்க முடியாது என விசேட வைத்திய நிபுணர் சமால் சஞ்சீவ விசனம் வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் சுகாதாரத் துறையில் நிலவும் பாரிய பின்னடைவுகள் மற்றும் மருந்து ஒழுங்குமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வுகாணக் கோரி, மருத்துவம் மற்றும் சிவில் உரிமைகளுக்கான சங்கங்களின் கூட்டமைப்பு இந்தியப் பிரதமருக்கு விசேட மகஜர் ஒன்றை கையளித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை (30) காலை இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இதனை ஒப்படைத்த பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அச்சசங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமால் சஞ்சீவ குறிப்பிடுகையில்,
வாழும் உரிமையை அடிப்படை உரிமையாகக் கொண்ட இந்திய அரசியலமைப்பைப் போலவே, எமது நாட்டு மக்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதற்கான பொறுப்பு எமக்கு உண்டு. தற்போது இலங்கையின் சுகாதாரத் துறை மோசமான நிர்வாகச் சீர்கேட்டினால் பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இந்த நிலையில், இலங்கையின் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் நேரடித் தலையீட்டை நாம் கோரியுள்ளோம்.
குறிப்பாக, இலங்கையில் தரமான மருந்து விநியோகத்தை உறுதிப்படுத்த உலக சுகாதார ஸ்தாபனத்தால் அங்கீகரித்த ஆய்வகம் ஒன்றை நிறுவுவதற்குத் தேவையான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்.
இது ஒரு கடனாக அன்றி, இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவின் அடிப்படையில் வழங்கப்படும் நிதியுதவியாக இருக்க வேண்டும் என்பதே எமது விருப்பம். அரசாங்கமும் அதிகாரிகளும் பிரச்சினைகளைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள் எனினும மக்களுக்குத் தேவை தீர்வுகளே.
அரச வைத்தியசாலைகளில் போதியளவான ஊழியர்கள் இல்லை, பரிசோதனை உபகரணங்கள் செயலிழந்துள்ளன, அறுவைச் சிகிச்சைகளுக்காகக் காத்திருக்கும் போதே நோயாளிகள் மரணிக்கும் அவலம் தொடர்கிறது. கடந்த காலங்களில் இத்துறையில் பதவி வகித்த அதிகாரிகளே இன்று ஊடகங்களுக்கு முன்னால் வந்து ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டிக் கொள்கின்றனர்.
சுகாதார அமைச்சரோ அல்லது ஜனாதிபதியோ இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. ஜனாதிபதியைச் சந்திக்க நாம் பலமுறை விடுத்த கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
சுகாதார துறையில் எழுந்துள்ள சிக்கல்களுக்கு தீர்வுகளை வழங்குவதற்குப் பதிலாக, பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டும் ஊடகங்களையும் சிவில் அமைப்புகளையும் ஒடுக்க சுகாதார அமைச்சர் முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது. சந்திரனைக் காட்டும் போது விரலை வெட்ட நினைப்பது போன்ற இச்செயல் அமைச்சருக்கு நல்லதல்ல. ஊடகங்களை முடக்குவதன் மூலம் சுகாதார நெருக்கடியை மறைக்க முடியாது. எனவே, அடக்குமுறைகளை விடுத்து, மக்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்த இந்திய - இலங்கை நட்புறவைப் பயன்படுத்தித் தீர்வு காண முன்வருமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM