(நெவில் அன்தனி)
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்பட்டுவரும் சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத்தில் இலங்கை போக்குவரத்துச் சபை கழகத்துக்கு எதிரான போட்டியில் சோண்டர்ஸ் கழகமும் கோல் மழை பொழிந்து 5 - 0 என இலகுவாக வெற்றிபெற்றது.
செரெண்டிப், நியூ ஸ்டார் ஆகிய கழங்களும் இ.போ.ச. கழகத்துக்கு எதிராக முறையே 6, 8 என கோல் மழை பொழிந்திருந்தன.

கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் நேற்று இரவு மின்னொளியில் நடைபெற்ற ஏ குழுவுக்கான போட்டியின் ஆரம்பப் பகுதியில் இ.போ.ச. கழகத்திடம் சோண்டர்ஸ் கழகம் கடும் சவாலை எதிர்கொண்டது.
அதேவேளை, சோண்டர்ஸ் கழக வீரர்கள் வழமைபோல் பல கோல் போடும் வாய்ப்புகளைத் தவறவிட்ட வண்ணம் இருந்தனர்.
ஆட்டம் இடைவேளையை நெருங்கிக்கொண்டிருந்தபோது உபாதையீடு நேரத்தில் சோண்டர்ஸ் கழகம் சார்பாக ஸியார்ட் முபாஸல் கோல் ஒன்றைப் போட்டு தனது அணியை முன்னிலையில் இட்டார்.
இடைவேளைக்குப் பின்னர் திறமையாக விளையாடிய சோண்டர்ஸ் கழகம் சிறுக சிறுக ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது.
சோண்டர்ஸ் கழகம் சார்பாக அறிமுகமான ஐவரி கோஸ்ட் நாட்டைச் சேர்ந்த ரொஜர் பிலிப் 55ஆவது நிமிடத்தில் கோல் போட்டு அதன் கோல் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கினார்.

போட்டியின் 37ஆவது நிமிடத்தில் மாற்று வீரராக களம் இறங்கிய 16 வயதுடைய மொஹமத் ஸெய்த் 68ஆவது நிமிடத்தில் சோண்டர்ஸ் கழகத்தின் 3ஆவது கோலைப் புகுத்தினார்.
இப் போட்டியில் மிகத் திறமையாக விளையாடிய ரொஜர் பிலிப் 80ஆவது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலைப் போட்டார்.
ஐந்து நிமிடங்கள் கழித்து இ.போ.ச. கழகத் தலைவர் துவான் பாஹிம் தவறுதலாக பந்தை சொந்த கோலினுள் புகுத்தி சொண்டர்ஸ் கழகத்துக்கு ஐந்தாவது கோலை கொடுத்தார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM