இலங்கை சர்­வ­தேச பயன்­பாட்டு உள­வியல் மாநாடு : இவ்­வாரம் கொழும்பில் ஆரம்பம்

Published By: Robert

23 Aug, 2017 | 10:36 AM
image

கொழும்பு ஆராய்ச்சி மற்றும் உள­வியல் நிறு­வ­னத்­தினால்  ஏற்­பாடு செய்­யப்­படும் இலங்கை சர்­வ­தேச பயன்­பாட்டு உள­வியல் மாநாடு இந்த வாரம் கொழும்பில் ஆரம்­ப­மா­கின்­றது. உலகப் புகழ்­பெற்ற உள­வி­ய­லா­ளரும் நேர்­மறை உள­வி­யலின் தந்­தை­யு­மான பேரா­சி­ரியர் மார்டின் செலிங்மன் இந்த  மாநாட்டில் கலந்­து­கொள்­கின்றார்.

ஐ-கெப் இலங்கை -   2017 சர்­வ­தேச பயன்­பாட்டு உள­வியல் மாநாடு இந்த வாரம் கொழும்பில் ஆரம்­பிக்­கப்­ப­டு­கின்­றது. சுகா­தார அமைச்சின் ஏற்­பாட்டில் இடம்­பெறும் இந்த மாநா­டா­னது 26,27,28 ஆம் திக­தி­களில் இடம்­பெ­ற­வுள்ள நிலையில் இந்த மாநாட்டில் சிறப்பு அதி­தி­யாக உலகப் புகழ்­பெற்ற உள­வி­ய­லா­ளரும் நேர்­மறை உள­வி­யலின் தந்­தை­யு­மான பேரா­சி­ரியர் மார்டின் செலிங்மன் மாநாட்டில் கலந்­து­கொள்­கின்றார். 

அத்­துடன் சர்­வ­தேச நாடு­களின் உள­வியல் சார் பேரா­சி­ரி­யர்கள், தத்­துவ ஞானிகள், விசேட வைத்­தி­யர்கள் மற்றும் சுகா­தார அமைச்­சி­லி­ருந்து அதி­கா­ரிகள், உள­வி­ய­லாளர்கள், உள­வியல் தொழில்சார் நபர்கள், சமூக உள­வி­ய­லாளர்கள், அரசு தொடர்­பு­டைய பிர­தி­நி­திகள், தனியார் மற்றும் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் உறுப்­பி­னர்கள் இந்­நி­கழ்வில் கலந்­து­கொள்­கின்­றனர். 

 இந்த மாநாட்டில் கலந்­து­ கொள்ளும் உலகப் புகழ்­பெற்ற உள­வி­ய­லா­ளரும் நேர்­மறை உள­வி­யலின் தந்­தை­யு­மான பேரா­சி­ரியர் மார்டின் செலிங்மன் மாநாட்டில் 1964  ஆம் ஆண்டு பிரின்ஸ்டன் பல்­க­லைக்­க­ழ­கத்தில் பட்டம் பெற்­றவர். 1967 ஆம் ஆண்டு பென்­சில்­வே­னியா  பல்­க­லைக்­க­ழ­கத்தில் தனது கலா­நிதி கற்­கையை முடித்தார். 1998 ஆம் ஆண்டு அவர் அமெ­ரிக்க உள­வி­ய­லாளர் சங்­கத்தின் தலை­வ­ராக தெரி­வு­ செய்­யப்­பட்டார்.   இவர் 250ற்கும் மேற்­பட்ட கட்­டு­ரைகள் மற்றும் உண்­மை­யான மகிழ்ச்சி, அசா­தா­ரண உள­வியல், ஆர்ப்­டி­மிஸ்டிக் குழந்­தைகள் போன்ற தலைப்­பு­களில் 20 க்கும் மேற்­பட்ட சுய உதவி புத்­த­கங்­களை எழு­தி­யுள்ளார். 

இவ­ரு­டைய நூல்கள் பதி­னொரு மொழி­களில் மொழி­ பெ­யர்க்­கப்­பட்டு, அமெ­ரிக்க மற்றும் பல்­வேறு நாடு­க­ளிலும் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. மேலும் இவர் குறிப்­பிட்ட சில காலமாக அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றியுள்ளார். அமெரிக்க இராணுவத்தின் இராணுவ வீரர்களிடையே உளவியல் ரீதியான மீள்வரவை உருவாக்கு வதற்கான கடமையினை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37