இலங்கையில் 2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 2,545 வீதி விபத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யு. ஜி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
பொலிஸ் ஊடகப் பிரிவில் இன்று திங்கட்கிழமை (29) காலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் இதனை தெரிவித்துள்ளார்.
பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவிக்கையில்,
2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் வீதி விபத்துக்களால் 2,692 பேர் உயிரிழந்துள்ளனர்.
2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025 ஆம் ஆண்டில் அதிகளவான வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
அதன்படி, 2024 ஆம் ஆண்டை விட 2025 ஆம் ஆண்டில் வீதி விபத்துக்கள் 272 ஆக அதிகரித்துள்ளதுடன் உயிரழப்புக்களின் எண்ணிக்கை 317 ஆக உயர்வடைந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM