நாட்டில் இடம்பெற்ற வெவ்வேறு வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு!

Published By: Digital Desk 1

29 Dec, 2025 | 09:55 AM
image

நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் நேற்று (28) இருவர் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி, எப்பாவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெக்கிராவ - தலாவ வீதியில் கிரலோகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தலாவயிலிருந்து எப்பாவல நோக்கிச் சென்ற கார் ஒன்று, எதிர் திசையில் வந்த லொரியுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. 

இதன்போது, காரில் பயணித்த ஓட்டுநர், ஒரு ஆண் மற்றும் மூன்று பெண்கள் காயமடைந்து தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் மெல்சிரிபுர பகுதியை சேர்ந்த 73 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

சடலம் தலாவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், எப்பாவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, மாத்தறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாத்தறை - தங்காலை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாத்தறையிலிருந்து கந்தர நோக்கிச் சென்ற வேன் ஒன்று கடற்கரை வீதியில் வலதுபுறம் திரும்பவிருந்தபோது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் வேனின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. 

இந்த விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.

விபத்தில் உயிரிழந்தவர் மாத்தறை, வல்கம பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

சடலம் மாத்தறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செப்டம்பர் 20 முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில்...

2026-09-15 18:33:27
news-image

எரிபொருள் விலை திருத்தம் : பெற்றோலியக்...

2026-09-15 18:17:35
news-image

பிராந்திய கடல்சார் தகவல் மையங்களின் பிரதிநிதிகள்...

2026-09-15 18:10:28
news-image

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு விளக்கமறியல்...

2026-09-15 17:46:04
news-image

எல்-நினோ காலநிலை தாக்கத்தை எதிர்கொள்ள விசேட...

2026-09-15 17:32:19
news-image

மயிலத்தமடு - மாதவனை கால்நடை பண்ணையாளர்கள்...

2026-09-15 17:30:06
news-image

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக 24ஆம்...

2026-09-15 17:40:26
news-image

ஜனநாயக மரபுரிமைகளைப் பாதுகாத்துத் தொழில்நுட்பமும் சட்டத்தின்...

2026-09-15 17:16:53
news-image

மக்களைத் தேடிச் செல்லும் சேவை அமைப்பாக...

2026-09-15 17:13:48
news-image

போக்குவரத்துத் துறையில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம்...

2026-09-15 17:45:57
news-image

உயிரளவியல் தரவு அடையாள அட்டைக்கு எதிர்ப்பு...

2026-09-15 16:12:56
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்து ஆசனங்களிலும் ஆசனப்...

2026-09-15 16:15:31