அனர்த்தங்களின் தாக்கம்: உடைமைகளுக்கு மேலாக சமூக உளவியலையும் பாதிக்கும்

28 Dec, 2025 | 01:43 PM
image

அனர்த்தங்கள் உடைமைகள், அன்றாட வாழ்வியல் , நடைமுறைகள் என்பவற்றினை மட்டுமல்ல பாதிக்கப்பட்ட சமூகங்களின் உளவியலிலும் பாதிப்பினை ஏற்படுத்தி விடுகின்றன.

அதிலும் குறிப்பாக சிறுவர்கள் இவ்வாறான அனர்த்தங்களினால் எதிர்கொள்கின்ற சிக்கல்கள் கவனத்திற்கொள்ளப்பட வேண்டியதொன்று. அந்த வகையில் கடந்த மாதம் இலங்கை மக்களை உலுக்கிய டித்துவா புயலின் பாதிப்பும் அதனால் தம் உறவுகள், உடைமைகளை இழந்து நிற்கின்றவர்களது பாதிப்பும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான பாதிப்புகளுக்கு முகங்கொடுத்துள்ள சிறுவர்களது உள ஆற்றுகைக்கான நிகழ்வுகளை முன்னெடுக்கின்ற அமைப்புக்களுள் வண்ணாத்திப்பூச்சி சமாதான பூங்காவும் (Butterfly Peace Garden) ஒன்று. கடந்த முப்பது வருடங்களாக இவர்கள் பல்வேறுப்பட்ட நல்லிணக்கம் சார் நிகழ்வுகள், மதத்தலைவர்களின் ஒன்றிணைப்புக்கள், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உள ஆற்றுப்படுத்தல்கள், சுனாமியினால் பாதிப்படைந்தவர்களுக்கான உள ஆற்றுப்படுத்தல்கள் என்பவற்றினை முன்னெடுத்து வந்துள்ளனர். ஆந்த வகையில் தற்போது இவர்களது பயணம் மலையக மக்களை நோக்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக நேற்று சனிக்கிழமை (27)  மாவனெலல்ல நோக்கிய மனிதநேய பயணத்தினை மட்டக்களப்பிலிருந்து ஆரம்பித்துள்ளனர். நேற்றைய தினம் இவர்களினால் மாவனெல்ல நாவந்தல கிராமத்திலுள்ள புத்தவிகாரையில் தங்கியுள்ள 36 குடும்பங்களைச் சேர்ந்த 45 சிறார்களுக்கும் 40 வயதுவந்தவர்களுக்குமான உள சமூக ஆற்றுப்படுத்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிறுவர்களுக்கான கைப்பணி வேலைகள், பாடல்கள், நாடகங்கள் ஊடாக ஆற்றுப்படுத்தல் செயற்பாடுகள் இடம்பெற்றன.

இதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் இவர்கள் ஏனைய இடைத்தங்கல் முகாம்களுக்கு பயணிக்கவுள்ளதுடன் தொடர்ச்சியாக தமது ஆற்றுப்படுத்தல் நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கான பயணத்தினை மேற்கொள்ளவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் ஒன்றுகூடும் யாழ். புனித பத்திரிசியார்...

2026-09-12 13:31:05
news-image

பிரதமரின் தலைமையில் நடைபெற்ற 37ஆவது சரசவிய...

2026-09-10 16:06:31
news-image

2026ஆம் ஆண்டிற்கான இலவச Education USA...

2026-09-10 17:37:33
news-image

நல்லூர் மஹோற்சவத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற...

2026-09-09 15:56:00
news-image

67ஆவது அரச இலக்கிய விருது விழா...

2026-09-09 14:04:59
news-image

நேபாள அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு 13ஆம் நாள்...

2026-09-08 14:45:40
news-image

சக்தியின் கந்தன் திருக்கூடம்

2026-09-08 10:11:12
news-image

25 ஆண்டுகளின் பின்னர் முருங்கன் கல்நாட்டியில்...

2026-09-07 16:21:15
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

2026-09-06 15:00:28
news-image

ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அறநெறிப் பாடசாலை...

2026-09-06 12:01:08
news-image

யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா!

2026-09-05 15:58:42
news-image

மட்டக்களப்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற ‘Hands...

2026-09-05 15:18:22