விற்பனைக்காக ஹட்டனுக்கு கொண்டுவந்த கஞ்சா ஒரு தொகையுடன் இருவரை நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

எம்பிலிபிட்டியவிலிருந்து ஹட்டன் நோக்கி வந்த இலங்கை போக்குவரத்து பஸ்ஸை இன்று மாலை கினிகத்தேன தியகல பகுதியில் வைத்து மேற்கொள்ளப்பட்ட   திடீர் சுற்றிவளைப்பு  சோதணையின் போதே பொதி செய்யப்பட்ட  250 கிராம் கஞ்சா பைக்கற்று இரண்டுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நோட்டன் பிரிட்ஜ்  இரகசிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் யூ.ஜீ.ஆர்.எம்.உடுகம தலைமையில் மேற்கொள்ப்பட்ட சுற்றுவளைப்பில் கினிகத்தேன மற்றும் எம்பிலிபிட்டிய செவனகல பிதேசத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொண்டுவரப்பட்ட 500 கிராம்  கஞ்சா தொகையை சிறிய பைக்கற்றுக்களாக பொதி செய்து விற்பனை செய்வதற்கே கொண்டு வரப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இருவரையும் ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்தாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.