(ஆர்.யசி)

2017 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலில் தத்தமது பெயர்கள் உள்ளடக்கப்படாவிட்டால் உடனடியாக தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் அறிவிக்கும்படி சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த  தேசப்பிரிய பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் இதனை உறுதிபடுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

தேர்தலுக்கான வாக்காளர் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு விடுத்துள்ள விசேட அறிக்கையில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.