மலேசியாவில் வரலாறு படைத்த இலங்கை தமிழ் பாடசாலை விவாதிகள் – சர்வதேச வெற்றியுடன் புதிய சாதனை

26 Dec, 2025 | 04:29 PM
image

இலங்கையின் தமிழ் விவாதிகள் கழகம் (Tamil Debaters’ Council of Sri Lanka) அதன் தேசிய மேம்பாட்டு அணியின் மூலம் இலங்கை தமிழ் விவாத வரலாற்றில் சிறப்புமிக்க சர்வதேச வெற்றியைப் பெற்றுள்ளனர். 

மலேசியாவில் நடைபெற்ற “சம்பந்தன் பைந்தமிழ் சுடர் 5.0” சர்வதேச தமிழ் விவாதப் போட்டியில், இலங்கை அணி வெற்றிக் கேடயத்தைக் கைப்பற்றி, இந்தப் போட்டியின் வரலாற்றில் முதன்முறையாக மலேசியாவிற்கு வெளியேயான அணியாகவும், சர்வதேச அணியாகவும் வெற்றி பெற்றுள்ளது. 

இதன் மூலம், தமிழ் விவாதிகள் கழகத்தின் தேசிய மேம்பாட்டு அணியின் சர்வதேச வெற்றிகளுக்கான பாதை அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது.

வெற்றி பெற்ற இலங்கை அணி

மலேசியா உத்தாரா பல்கலைக்கழகம் (UUM) நடத்திய சர்வதேச தமிழ் விவாதப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றி பெற்ற அணி:

ஹரீஷ் ஜெயரூபன் – அணித் தலைவர் - றோயல் கல்லூரி கொழும்பு  

மைக்கேல் ஜெனுஷன் - புனித பத்திரிசியார் கல்லூரி, யாழ்ப்பாணம் 

சிவாஜினி பிரதீபன் - யா/ மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை

லக்ஷ்மிதா சிவசங்கரன் - ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி

இதனுடன், இலங்கை சார்பில் மேலும் பல அணிகள் மலேசியாவின் முக்கிய பல்கலைக்கழகங்களில் பங்கேற்றன.

மலாயா பல்கலைக்கழகத்தில் (UM) இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய அணி:

யுகப்பிரியன் நிறைஞ்சன் - பரிதோமாவின் கல்லூரி  

தரணிகா தவரூபரசன் - கிளிநொச்சி மகா வித்யாலாம்

- ஸ்ரீ அக்ஷ்யா ரேஜி ஜனகன் - ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி

UUM இல் நடைபெற்ற விளக்கவுரை (Presentation) அணியில் பங்கேற்றோர்:

சரவண நிர்த்திகா மீனாட்சி சுந்தரம் - பேராயர் கல்லூரி, கொழும்பு

பிரகதிஸ்ரீ ராமச்சந்திரன் - மகளிர் கல்லூரி, கொழும்பு

தனேந்திரன் கார்த்திகன்  - றோயல் கல்லூரி, கொழும்பு

இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் சிறப்பு கௌரவிப்பு

இந்த வரலாற்றுச் சாதனையைத் தொடர்ந்து, இலங்கை அணிக்கு மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ரிஸ்வி கோலாலம்பூரிலுள்ள உயர்ஸ்தானிகராலயத்தில் அதிகாரப்பூர்வ கௌரவிப்பு வழங்கினார்.

இந்தச் சந்திப்பின்போது, இலங்கை மாணவர்கள் காட்டிய ஒழுக்கம், கல்வித் திறன் மற்றும் சர்வதேச மேடையில் நாட்டை மரியாதையுடன் பிரதிநிதித்துவப்படுத்திய விதத்தை உயர்ஸ்தானிகர் பாராட்டினார். 

மேலும், இலங்கை – மலேசியா இடையே வருடாந்த விவாதப் போட்டிகள் மற்றும் பண்பாட்டு – சுற்றுலா அடிப்படையிலான நிகழ்வுகளை ஆரம்பிப்பதற்கான எதிர்கால வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், மலேசியாவில் வாழும் சிலோனிய தமிழர்களின் வரலாறு குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்த உயர்ஸ்தானிகர், மலேசிய சிலோனிய சங்கத்தின் தலைவர் அவர்களுடன் தொலைபேசி மூலம் மாணவர்களை இணைத்து வைத்தார். இது இரு நாடுகளுக்கிடையேயான தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

இலங்கை தமிழ் பாடசாலை விவாத வரலாற்றில் புதிய சாதனை

இந்தச் சர்வதேசப் பயணம், ஒரே பிரதிநிதி குழுவாக மலேசியாவின் ஐந்து மாநிலங்களில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய மிகப் பெரிய தமிழ் பாடசாலை மாணவர் குழுவாக பதிவாகியுள்ளது.

இலங்கை அணி பங்கேற்ற பல்கலைக்கழகங்கள்:

•      வட மலேசியா பல்கலைக்கழகம் (UUM) 

மலாயா பல்கலைக்கழகம் (UM) – கோலாலம்பூர்

மலேசியா திரெங்கானு பல்கலைக்கழகம் (UMT) மற்றும் UniSZA – திரெங்கானு

மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் (USM) – பெனாங்கு

சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகம் (UPSI) – பேராக்

இந்த  வெற்றியும் உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்ற சந்திப்பும் இலங்கை தமிழ் விவாதிகளுக்கும் தமிழ் விவாதிகள் கழகத்தின் வரலாற்றிலும் ஒரு முக்கிய திருப்புமுனையாக கருதப்படுகிறது. இது சர்வதேச அளவில் கல்வி, பண்பாடு மற்றும் போட்டித் தளங்களில் புதிய வாயில்களை திறந்துள்ளது.

தமிழ் விவாதிகள் கழகம், இந்தச் சாதனை ஒழுங்கமைக்கப்பட்ட பயிற்சி, கட்டுப்பாடு மற்றும் நீண்டகால பார்வையின் பலன் என தெரிவித்ததுடன், எதிர்காலத்தில் இலங்கை தமிழ் பாடசாலை விவாதிகள் உலக அரங்கில் மேலும் உயர்வுகளை அடைவார்கள் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

"நூலைப்படி" : நாட்டிய நூல்களின் அறிமுக...

2026-01-19 23:27:21
news-image

கலாமித்ரா விருது விழா : பாடல்...

2026-01-19 21:37:23
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் அறநெறிப்...

2026-01-19 16:57:55
news-image

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர்,  தென்னிந்திய...

2026-01-18 16:30:25
news-image

கண்டியில் கலாஞ்சலி நாட்டிய நிகழ்வு ஏற்பாடு

2026-01-16 18:37:47
news-image

நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் பொங்கல் விழா...

2026-01-16 11:31:03
news-image

செல்வி தானியா சுரேந்திரனின் பரதநாட்டிய அரங்கேற்றம்

2026-01-15 18:30:10
news-image

வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2026-01-15 21:41:08
news-image

கொழும்பு - காக்கைதீவில் மாபெரும் பொங்கல்...

2026-01-15 17:58:43
news-image

“Lanka Ride” துவிச்சக்கரவண்டிப் பேரணி நாளை...

2026-01-15 11:43:05
news-image

'MEANDERING MOODS' ஓவியக் கண்காட்சி

2026-01-14 15:34:00
news-image

சவூதி அரேபியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இலங்கையில்...

2026-01-13 17:01:00