நுவரெலியா கெலேகால ஸ்ரீ கதிரேஷன் ஆலயத்தில் மகரஜோதி மண்டல பூஜை

25 Dec, 2025 | 06:24 PM
image

நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியோரத்தில் அமைந்துள்ள கெலேகால ஸ்ரீ கதிரேஷன் ஆலயத்தில் அகில இலங்கை ஸ்ரீ தர்ம சாஸ்தா குருப்பீடம் நடாத்திய 38வது வருட மகரஜோதி மண்டல பூஜை புதன்கிழமை (24) நடைபெற்றது. 

இதில்  திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்தனர்.

விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டு, ஸ்ரீ தர்ம சாஸ்தாவிற்கு சங்காபிஷேகம் நடைபெற்று, அதனை தொடர்ந்து பஜனை பாடி, படி பூஜை நடைபெற்றது.

மகேஸ்வர பூஜையுடன் பகல் 12.30 மணியளவில் சுவாமிமார்களுக்கும் ஐயப்பன் பக்த அடியார்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 

அதனை தொடர்ந்து மாலை 4 மணியளவில் விஷேட வசந்த மண்டப பூஜை நடைபெற்று மங்கள வாத்தியங்கள் முழங்க சரண கோஷத்துடன் குதிரையின் மேல் கருப்பண்ண சுவாமியும் மின் விளக்குகளினால் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஐயப்பன் வீதி உலா நடைபெற்றது.

நகர் வலம் முடிந்து தேர் ஆலயத்தை வந்தடைந்ததை தொடர்ந்து  பிராயச்சித்த அபிஷேகம் நடைபெற்று கருப்பண்ணசுவாமி பூஜையுடன் அடியார்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்த பூஜைகள் குருசுவாமி பிரம்மஸ்ரீ தயாளன் குருக்களின் புதல்வன் இளம்சுடர் நித்தியலங்கார பூசனம் பிரம்மஸ்ரீ த. சுதன்சர்மா ஆலய பிரதம குரு தலைமையில் ஆகம சாஸ்திர முறைப்படி நடைபெற்றது.

இந்த பூஜையில் ஆலய நிர்வாகிகள் உட்பட ஐயப்ப குருசுவாமிமார்கள், சுவாமிமார்கள், பக்த மெய்யடியார்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரதமரின் தலைமையில் நடைபெற்ற 37ஆவது சரசவிய...

2026-09-10 16:06:31
news-image

2026ஆம் ஆண்டிற்கான இலவச Education USA...

2026-09-10 17:37:33
news-image

நல்லூர் மஹோற்சவத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற...

2026-09-09 15:56:00
news-image

67ஆவது அரச இலக்கிய விருது விழா...

2026-09-09 14:04:59
news-image

நேபாள அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு 13ஆம் நாள்...

2026-09-08 14:45:40
news-image

சக்தியின் கந்தன் திருக்கூடம்

2026-09-08 10:11:12
news-image

25 ஆண்டுகளின் பின்னர் முருங்கன் கல்நாட்டியில்...

2026-09-07 16:21:15
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

2026-09-06 15:00:28
news-image

ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அறநெறிப் பாடசாலை...

2026-09-06 12:01:08
news-image

யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா!

2026-09-05 15:58:42
news-image

மட்டக்களப்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற ‘Hands...

2026-09-05 15:18:22
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய 20ஆம் திருவிழா...

2026-09-05 11:57:07